பக்கம்:மனோன்மணீயம்.pdf/286

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. ஜீவகன் அவன் பயங்குபோலக் களங்கமில்லாத தெஞ்சினன். - -பேராசிரியர் சுந்தரம் பிள்கை படைப்புக் காலந்தொட்டு மேம்பட்டு வரும் பாண்டிய மரபிலே வந்த் மன்னன் ஜீவகன், ஆதி இன்னதென்று ஒது வதற்கரிய வழுதியின் தொல்குலம்’ என்று தான் பிறந்த பாண்டியன் குலத்தினைப் பற்றி ஜீவ கனே ஓரிடத்தில் பெருமை பாராட்டிக் கொள்கிறான். எடுப்பார் கைப் பிள்ளை தடுப்பார் யாரே என்ற நாராயணன் கூற்றுப்படி தன் மதிமந்திரி குடிலன் ஆட்டி வைத்தபடியே நாடகத் தொடக்க முதல் இறுதிவரை ஆடுகிறான். தனக்கென்று ஒரு கொள்கை; ஒருசெயல்முறை என ஒன்றின்றிக் குடிலன் ஒளியிலேயே ஒளி விட நினைக்கிறான். இதனைக் குடிேைன ஒருமுறை, நாமே அரசும்; காமே யாவும் மன்னவன் நமது கிழலில் மறைக்தான் என்று குறிப்பிடுகின்றான். குடிலனின்றி யாதொரு செயலும் ஆற்ற இயலாதவனாக இவன் முடங்கிக் கிடக் கிறான். இதுவே ஜீவகனிடத்தில் நாம் காணுகின்ற பெருங் குறையாகும். இக் குறையே நாடக மாந்தர் பலர் நலிவுறக் காரணமாகின்றது. குடிைைனக் குறைவற நம்பிய கொடுமை ஜீவகன் எடுத்த தற்கெல்லாம் அவன் ஆலோசனைப்படியே நடப்பதிலிருந்து தெரியவருகிறது. எனவே குடிலனை இவன் நாடகத்தின் பல விடங்களிலும் நன்றாகப் புகழ்கிறான். பழுதிலாக் குடிலன்' என்றும், வாராய் குடில மந்திரி உனக்கு நேர்தான் ஆரே, என்றும், நமது பாக்கியம் அல்லவோ இவனை நாம் அமைச்சனாகப் பெற்றது" என்றும், மதியுளார் யாரவன் மதியதி சயித்திடார் என்றும், என்னே இவன்மதி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/286&oldid=856472" இலிருந்து மீள்விக்கப்பட்டது