பக்கம்:மனோன்மணீயம்.pdf/292

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

290 மனோன்மணியம் கின்றான் குடிலன். நாநயமும் சொற்சாதுரியமும் பேச்சு வன்மையும் பெரிதும் உடையவன் குடிசைன் என்பது குடிலனின் தொடக்கப் பேச்சிலேயே தெரியவருகின்றது. திருவாசகத்தினைத் திறம்படத் தெரிந்தவன் போன்று தன் பேச்சுக்குத் தென்பாண்டி நாடே சிவலோக மாமென முன் வாதவூரர் மொழிந்தனர்" என மேற்கோள் காட்டுகின்றான். உலகினைப் பசுவாகவும், பாரத நாட்டினை அப்பசுவின் மடி யாகவும், தென்பாண்டி நாட்டினை அப்பசுவின் பால்கொடு. சுரையாகவும் குறிப்பிடும் குடிலன் கூற்றில், அவன் பரந்து பட்ட அறிவு விளக்கமுறுகின்றது. மேலும் கோட்டையின் உயரத்தினைக் குறிப்பிட, மஞ்சுகண் துஞ்சுகம் இஞ்சி புரிஞ்சி உதயனு முடல்சிவங் தானே என்று குறிப்பிடுவதில் எத்துணை இலக்கிய தயம் கமழ்கின்றது. * முனிவரா குடிலன் பேச்சில் மயங்குகின்றவர்; அவர் அப்பால் அந்தப்புரம் சென்று மனோன்மணியைக் கான வேண்டுமென விரைகிறார். அவர் அப்புறம் போக நங், காரியம் ஜயம் எங்காகினுஞ் செல!" என்று கூறி, மகிழ்ச்சிக் களிப்பில் தன் செயல் சித்தியடைந்த சிந்தையோடு குடிலன் வெளியேறுகின்றான். இத்தகு தன்னல நோக்கமே அவன் வாழ்வாக-அதன் அடித்தளமாக அமைகிறது. நகரவாசிகள் பேசிக்கொள்வதிலும் இந்த உண்மையே வலியுறுகின்றது. கடல் மடை திற்ந்ததுபோல் குடிலன் பேசியதாக முதல். தகர வாசி குறிப்பிடுகின்றான். இரண்டாம் நகரவாசி அவன் அராணக் கதையினை வீணாக விளம்பினதாகக் கூறுகின் றான். குடிலன் செய்யும் படிறுகள் முனிவர் அறியாத வரோ? " என் று வினவும் மூன்றாம் நகரவாசியின் கூற்றால் நகரவாசிகளுக்கும் குடிலனின் வஞ்சனை புலப் பட்டுப் போயினமையை அறிந்து கொள்கிறோம். நகரவாசிகள் மட்டுந்தானா குடிலன் திட்டத்தை அறிந்து துள்ளனர் நாட்டுப்புறத்தில் நடமாடும் உழவர்கள் கூட,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/292&oldid=856486" இலிருந்து மீள்விக்கப்பட்டது