பக்கம்:மனோன்மணீயம்.pdf/293

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடின்ை 29; அம்றோ அவணை உள்ளவாறு அறிந்துள்ளார்கள். ஒர் _ழவன் குடிலன் கைதொடில் மஞ்சளும் கரியாகும்மே." ான்று குடிலன் கைராசியினை விமர்சிக்கின்றான். பிறிதோர் உழவன், குடிலன் படிறன், கொற்றவன் காடும் முடியும் கவர்ந்து மொய்குழல் மனோன்மணி தன்னையும் தன்மகற்கு ஆக்கச் சமைந்தான் மன்னனைக் கொல்ல மலையனைத் தனக்குச் சூதாய்த் துணைவரக் கூவினான் ான்று குறிப்பிட்டுக் குடினிைன் உட்கோளினைப் சறை சாற்றுகின்றான். நாடகத்தில் வரும் நாராயணன் அறிவு நுட்கமும் பண்பொழுக்கமும் நிறைந்தவன். குடிலனை உள்ளவாறு அறிந்து, அவன் சூழ்ச்சியினைச் சிதைத்து, மன்னனைக் -ாக்கும் மாண்புடையவன் அவன். குடிலனைப் பின்வருமாறு அவன் மதிப்பிடுகின்றான் : ........................குடிலனோ சூதே உருவாய்த் தோன்றினன் அவன்தான் ஒதுவ உன்னுவ செய்குவ யாவும் தன்னயங் கருதி யன்றி மன்னனைச் சற்றும் எண்ணான் முற்றும் சாலமா கல்லவன் போலவே நடிப்பான், பொல்லா வஞ்சகன். ஆனாலும் குடிலனின் வல்லமையைப் பாராட்டவே வேண்டும். புத்தியே சகல சக்தியும் என்பதே குடிலனின் காரக மந்திரம். இவ் வல்லமையை நாராயணனும் உடன் படுகின்றான். 'நல்லது கருதான் வல்லமை என்பயன்?" ான்ற அவனுடைய கூற்று முற்றிலும் உண்மையே! 'அரசரைத் தன் - வஞ்சகச் சூழ்ச்சியால் ஏமாற்றி அரசினைப் பெறுவதே குடிலனது முயற்சி. அவன் தான் எண்ணுவதனை:மனத்தே மறைத்துக் கொள்வான்; அதனை மறைத்து உரையாடுவதற்கு வேண்டுவன எல்லாம் தானே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/293&oldid=856488" இலிருந்து மீள்விக்கப்பட்டது