பக்கம்:மனோன்மணீயம்.pdf/294

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292 மனோன்மணியம் பேகவான். அதனைப் பேசுகின்ற முறையிலேயே பிறர் அதனை மறுக்கும்படி பேசுவான். பிறர் அவ்வாறு மறுத்த உடன் அப்பிறர்க்கெனவே உடன்படுவான் போலத் தான் எண்ணியதனை முடித்துக் கொள்வான். இதுவே குடிலனது சூழ்ச்சியின் சிறப்பியல்பு.’ இவ்வாறு குடில உள்ளத்தினை ஆய்ந்து காண்கின்றார் அறிஞர் தெ. பொ. மீ. அவர்கள். வாணியின் தந்தை சகடர் பணத்தின் வலைப்படுகிறார். தன் மகள் வாணி தன் காதலன் நடராசனை மறந்து பல தேவனை மணக்கவேண்டும் என்று விரும்புகிறார். தன் விருப்பம் செயல்பட மன்னன் துணையையே நாடுகின்றார். அதுபொழுது அருகிலிருந்த குடிலன், நடராசனையே வாணி மணந்தாலென்ன குறை?" என்று கேட்கின்றான். "போம்! போம்! உமது குழந்தையேல் இங்கனம் கூறிரி' என்று வயிறெரிந்து பேசுகிறார் வயோதிகச் சகடர். குடிலன் மேலும் சூழ்ச்சிவலை விரிக்கின்றான். உள்ளத்தில் கள்ளங் கொண்டு உதட்டில் வேறொன்று பேசி நடிக்கின்றான். "அழகன்! ஆனந்தன்! என நடராசனைக் குறிப்பிடுகின்றான் குடிலன். மன்னன் அழகிருந்தென் பயன் தொழிலெலாம் அழிவே' என வெறுப்பில் மொழிகின்றான். குடிலன் விரும்பிய பயன் விளைகின்றது. விளைவினை அறுவடை செய்து கொள்ளத் தவறிவிடவில்லை குடிலன். கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொண்டு, சிதம்பரத்திற்கனுப்பினேன்; சென்றிலன் நின்றான்' என்று மன்னன் மனத்தில் கோபத் தீயினை மூட்டி, முனிவர் பிரியனாதலின் பெயர்ந்திலன் போலும் என்று முனிவரி பெருமை பேசுவது போன்று அவர் மேல் மன்னன் மனவெறுப்புக் கொள்ளச் செய்கிறான். *எரியும் கொள்ளியில் எண்ணெய் வார்த்தாற் போன்று' குடிலன் கூறிய சொற்களைக் கேட்டு, ஜீவக மன்னன், “சரியல, இராச்சியத் தந்திரத்து அவர்க்கு என்’ எனக் கேட்டு முனிவரின் அ ர சி ய ல் தலையீட்டினை வெறுத்துப் பேசுகின்றான். -- காதலனைக் கனவில் கண்டு மயங்கிப் பிதற்றுகிறாள் அமனோன்மணி. ஜீவகன் அது கண்டு வருந்த, உண்மை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/294&oldid=856490" இலிருந்து மீள்விக்கப்பட்டது