பக்கம்:மனோன்மணீயம்.pdf/307

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடராசன் 303 இதுபோன்றே மெல்லியலாரின் மென்மையான உன் சக்தினை- மலரினும் மெல்லிதான காமத்தின் செவ்வியை உணரும் சிலரில் ஒருவனாகக் காட்சி தருகிறான் நடராசன். ஆடவர் காத லறைதலுங் தையலர் கூடமாய்க் கொள்ளலும் இயல்பே போலும் என்று அகத்தினை ஆராய்ச்சி செய்கிறான். உளத்தோ டுளஞ்சென் றொன்றி.டிற் பின்னர் வியர்த்தமே செய்கையும் மொழியும் ான்று தன் காதல் அனுபவத்தினை எண்ணிக் களிக் விண்மான். மேலும், நாராயணன் மாதர் உள்ளத்தினை, 'அலையெறி கடல்" என்று கூறிய அளவில் , திரைபொரல் கரையிலும் வெளியிலு மன்றி கயத்திலும் அகத்திலுங் கலக்க மவர்க்கி ைல அன்று சரியான மறுமொழியும் புக்ல்வதோடு நில்லாது. புரு டிரின் புன்மையினையும் கடிந்து மொழிகின்றான். 'மணமும் அவர்க்கொரு வாணிகம்! அந்தோ சீ! சீ! என்.இத் தீயவர் செய்கை: ான்று ஆடவர் சிறுமை கண்டு அருவருப்படைகிறான். ாற்குண நற்செய்கையுடைய நங்கை, வாழ்வின் துணையாகக் கிடைத்தால் பொன்மலர் நாற்றம் பெற்றதாகும்’ என்றும், இல்லறம் பேரின்ப வெள்ளமா மூழ்கப் பக்குவஞ் செய்யும் பள்ளிச்சாலை' என்றும் கூறுகின்றான். இக்கூற்றுக்களால் இவன் மதிநுட்பம் புலனாகின்றது. பலதேவனின் தீய வொழுக்கத்தினைத் தன் செவியாற் கேட்டவுடனே சீறிச் சினக்கிறான். ஒருவன் ஒருத்தி எனும் உயரிய கொள்கைவழி இயங்கும் நடராசனால் பலதேவனின் விக் தீயொழுக்கம் மன்னிக்க முடியாததாயப்படுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/307&oldid=856528" இலிருந்து மீள்விக்கப்பட்டது