பக்கம்:மனோன்மணீயம்.pdf/309

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடராச்ன் 307. ான்றும் அது உழவர்க்கு உதவும் தொண்டினைப் பாராட்டி மொழிகின்றான். ஒடும் நீரினைப் பார்த்து, யாரே உனைப் போல் அனுதினம் உழைப்போர் என்று கூறுகிறான். வாய்க்காற் கரையில் முளைத்திருக்கும் சிறு புல்லினைப் பார்த்துத் தத்துவம் பேசுகின்றான். பாரிசாதம் போன்ற மலர்கள் மண்ணில் இரவில் மலர்கின்ற காரணத்தால்தான் நன்மனமும் வெண்ணிறமும் கொண்டு விளங்குகின்றன. ான்று தாவர இயலின் நுட்பம் பேசுகின்றான் நடராசன். மனோன்மணியின் திருமணம் குறித்துப் புருடோத்தம ரிடம் துரது செல்லப் பொருத்தமானவன் நடராசனே ான்று ஜீவகனிடம் கூறுகிறார் சுந்தர முனிவர். -ாக டராசன் என்னுளன் ஒருவன்; ஏவில் சென்றவன் முடிப்பன்: மன்றல் சிறக்கவே ாண்று முனிவர் கூற்றில் நடராசனின் செயல் திறம் மிளிர் விறது. முனிவர் பிரியன்" என்று குடிலனும் நடராசனைப் பற்றி ஜீவகனிடம் கூறுகின்றான். சுருங்கை வழி அமைப்ப வில் முனிவருக்குத் துணைநின்றவன் நடராசனே. முனிவரே மணம் திறந்து நடராசனைப் பாராட்டுகிறார்: எல்லாம் நடராசரே! உமதுபே ரருளே! அல்ல தென்றால் ஆகுமோ? சுருங்கை இத்தினம் எப்படி முடியும் நீர் இலரேல்? எத்தனை கருணை? எத்தனை கைம்மாறு? இத்தகைய பாராட்டு யாருக்கும் எளிதில் கிடைப் பதன் மன்றோ? மேலும் தவத்தின் திருவுருவமாய் இலங்கும் அந்தர முனிவரிடமிருந்து கிடைப்பதென்றால், நடராசனின் பிறப்பிற்கு வேறு சான்றும் வேண்டுமோ? இந்தப் புகழுரை கேட்ட நடராசன் பணிவுடன், கல்லது! கல்லது! சொல்லிய முகமன், வேலை எனதோ? உமதே! விநோதம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/309&oldid=856530" இலிருந்து மீள்விக்கப்பட்டது