பக்கம்:மனோன்மணீயம்.pdf/313

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாராயணன் 311 எண்ணங் கொண்டவராகவே இருப்பர்" என்ற கருத்தினைகி கொண்ட, புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி மூக்கிற் கரியார் உடைத்து என்ற குறட்கருத்தினை உள்ளடக்கியே நாராயணன் இவ்வாறு பேசுகின்றான் என்பது மன்னனுக்குத் தோன்ற வில்லை. எனவே அவன், ஒகோ. ஒக்ோ, உனக்கேன் பைத்தியம் என்று கூறி நகைக்க, உடனே அவையினரும் ஒகோ! ஒகோ! ஒகோ! ஒகோ! என்று சிரிப்பொலி எழுப்புகின்றனர். இவ்வாறு சிந்தித்து உணர்ந்து திருந்த வேண்டிய கருத்து, சிரிப்பாய்ப் போய் விடுகிறது. - குடிலனை நாராயணன் நன்கு அறிவான். ஆயின் அவன் அண்மையில் இருக்கும் அரசன் அறிந்தானில்லையே! குடில னின் பொய் வேடத்தை, போலி வாழ்வினை, வஞ்சக வழியினை வகையுறப் படம்பிடித்துக் காட்டுகிறான் நாராயணன. ......குடிலனோ சூதே யுருவாய்த் தோன்றினன்; அவன்தான் ஒதுவ உன்னுவ செய்குவ யாவுக் தன்னயங் கருதி யன்றி மன்னனைச் சற்று மெண்ணான் முற்றுஞ் சாலமா கல்லவன் போலவே நடிப்பான், பொல்லா வஞ்சகன் மன்னர் அருகுளோர் அதனை நெஞ்சிலும் கினையார் கினையினும் உரையார் என்று கூறும் நாராயணன் கூற்று நூற்றுக்கு நூறு உண்மை பன்றோ? மக்களின் மனப்பாங்கினைப் பாங்காக அறிந்தவன் அவன் என்பதும் இக்கூற்றால் புலனாகின்றது. நாராயணன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/313&oldid=856539" இலிருந்து மீள்விக்கப்பட்டது