பக்கம்:மனோன்மணீயம்.pdf/315

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாராயணன் 3.13 யினை எண்ணித் தனக்குள் இரங்குகின்றான். போர்க் அளத்தில் ஜீவகனைக் காப்பாற்றுவதோடு, போரில்அடைந்த தோல்வி கண்டு பொறாது உயிர்விடத் துணிந்த அவனைத் தடுத்து நிறுத்தி, 'மனோன்மணி தன்னை மறந்தாய் போலும்!' - என்று நல்ல சமயத்தில் ஜீவகனுக்கு மகள்பால் நினைவுவரச் செய்து அவன் உயிரைக் காப்பாற்றுகின்றான். pவகன் உயிர்விடத் துணிந்த நிலையில் இருந்து மீண்டு, வருந்திய படை மறவரைப் பார்த்து, | | பிரிய சேவகரே பீடையேன்? துயரேன்? இழந்தனம் முற்றும் என்றோ எண்ணினிர்! அழிந்ததோ நம்மரண்? ஒழிந்ததோ நம்படை? மும்மையில் இம்மியும் உண்மையில் ஒழிந்திலம் வெல்லுவம் இனியும்; மீட்போம் நம்புகழ் என்று வீர முழக்கமிடும் அளவிற்குச் செல்லும் அந்நிலையை உருவாக்கிய நாராயணனுக்கன்றோ நாம் நன்றி நவில வேண்டும். குடிலன் பேச்சால் தன்னைத் தவறாக எண்ணி ஜீவகன் தன்னைக் கழுவேற்றத் துணிந்த நிலையிலும், வெருவிலேன் சிறிதும் வேந்தகின் விதிக்கே அறியா யாயின் இதுகா றாயும் வறிதே மொழிகுதல்! வாழ்க கின்குலம்! என்று மன்னன் மரபு வாழ, வேண்டிநிற்கிறான். தண்டனை யடைந்த தனக்காகப் படைவீரர் கொதித்தெழுந்த நிலை யிலும், கொற்றவன் ஆணைக்கு அடங்குவதே அவர் தம் கடமை என்று சுட்டுகிறான். - மனோன்மணியும் இறுதியில் பலதேவனை மணக்கச் சம்மதித்த நிலையில் தான் ஜீவகனிடம் கேட்ட இரண்டு வரங்களில் ஒன்று நாராயணன் உயிர் மீட்டலாக அமைந் திருப்பது நாராயணன்பால் நாடகத் தலைவியாம் மனோன் மணி கொண்ட அன்பினைப் புலப்படுத்தும். ம-21

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/315&oldid=856543" இலிருந்து மீள்விக்கப்பட்டது