பக்கம்:மனோன்மணீயம்.pdf/321

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புருடோத்தமன் 3.19 உண்ணினைவில் ஒருபோதும் ஓய்வின்றிக் கலந்திருக்கும் உயிரே என்றன் கண்ணிணைகள் ஒருபோதும் கண்டிலவே கின்னுருவம் காட்டாய் என்று அவன் கனவில் வந்து கண்ணில் நின்று நெஞ்சில் உறைந்த மனோன்மணியைப் போரிடையிலும் மறவாது நினைந்து நினைந்து நெக்குருகுகின்றான். நிறைந்த காமுகன்' என இவனைக் குறிப்பிடும் குடிலன் உரை பழுதேயாம். சுருங்கை வழி வந்து எதிர்பாராமல் தன்னைக் கண்டு மாண்டியனையே காட்டிக் கொடுத்து, பாண்டிய நாட்டின் அரசுரிமை கேட்டிருக்கும் குடிலனைப் பாதகா 1 விசுவாச காதகா என்று தன்னுள் நினைந்து, அவன் சொல்லை ஏற்றுக் கொள்ளாமல் கைத்தளை காற்றளை கொண்டு அவனைக் கைதியாக்கிச் சுருங்கை வழியே பாண்டியன் அரண்மனைக்கு அழைத்து வருகிறான். புருடோத்தமன். கற்படை வழி வந்து மண வினைச் சடங்கு நடக்கும் இடத்தில் மறைவில் ஒருசார் திரையின் பின் ஒதுங்கி நின்று, அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளைக் கவனிக்கிறான். அது பொழுது இரவிலும் தன்பொருட்டே எங்கோ கடனாற்றப் போயிருப்பதாகக் குடிலனை ஜீவகன் கூறக் கேட்ட புருடோத்தமன், எத்தனை களங்கமில் சுத்தன்" என்று மன்னன் மடமை நோக்கி இரங்குகின்றான். மனோன்மணி மணமாலைகொண்டு பலதேவன் எதிர்வரும் வேளையில் புருடோத்தமன் திரைவிட்டு வெளியே வருகின்றான். புருடோத்தமனைக் கண்ட மனோன்மணி அவன் நிற்கு மிடமே விரைவில் நடந்து சென்று, அவன் தலை தாழ்ககவும் அவன் கழுத்தில் மாலை சூட்டி அவன் தோளோடு தளர்ந்து முர்ச்சிக்கிறாள். இங்கோ நீயுளை! என்னுயிர் அமிர்தே" என்கிறான் புருடோத்தமன். அவ்வளவில் யாவரும் அவ ன ச்ை சூழ, குடிலனைக் காட்டி அவையோர்க்க அாகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/321&oldid=856557" இலிருந்து மீள்விக்கப்பட்டது