பக்கம்:மனோன்மணீயம்.pdf/323

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. பலதேவன் குடிலனுடைய மகன் பலதேவன் என்னும் ஒரு துன்மார்க்கன் -பேராசிரியர் சுந்தரம் பிள்ளை அதிகார மேகம் கொண்ட அமைச்சன் குடிலனின் மகன் காம மேகம் கொண்ட பலதேவன் ஆவன். குடிலனோ வெனில் திட்டம் வகுத்துச் செயலில் மிளிர்பவன். சூழ்ச்சிசி சதிரைத் திறம்பட நிகழ்த்துபவன்; மதிமேம்பாடுடையவன். ஆனால் இவன் அருமைப் புதல் வனோ அரிவையர் சுகம் தேடி அலையும் மதியீனன். சிற்றின்ப வேட்கையே அவன் வாழ்வின் கருப்பொருளாய் அமைகிறது. கலமே சிறந்த குலமே பிறந்த பலதேவ னாமொரு பாக்கிய சிலாக்கியன் என்று பலதேவனைப் பாராட்டிப் பாண்டிய மன்னன் ஜீவகன் பேசுகின்றான். மேலும் புருடோத்தமனிடத்தில் துரது செல்லத் தக்க சூழ்ச்சித்திறன் உடையவன் நடராசனே என்று சுந்தரர் சொல்லியிருப்பவும், ஜீவகன் குடிலன் சொல் தேறி அவன் மகன் பலதேவனையே மன்றல் துாதினுக்குத் தேர்ந்தெடுக்கின்றான். அத்திறம் முற்றும் ஒத்தவ னாய் நமக் குரிமை பூண்டகின் அருமை மகன் பல தேவனே யுள்ளான் மேலவர் பலர்பால் முன்னம் பன்முறை துாதிலும் முயன்றுளான் என்று ஜீவகன் பேசுகின்றான். இது கேட்ட குடிலன், வசையறு புதல்வன் பாலியன் மிகவும்; காரியம் பெரிது’ என்று முன்னெச்சரிக்கையாகப் பேசித் தன் கருத்தை முடிக்கிறான். நாடக இறுதியிலும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/323&oldid=856629" இலிருந்து மீள்விக்கப்பட்டது