பக்கம்:மனோன்மணீயம்.pdf/324

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

322 மனோன்மணியம் எங்குர்ே கண்டுளிர் இச்சிறு வயதிற் பலதே வனைப்போற் பலிதமாம் சிறுதரு. என்று ஜீவகன் பலதேவனைப் பற்றிப் புகழ்ந்து அவையோ ரிடத்தில் பேசுகின்றான். - ஜீவகன் பல தேவன் பண்பினை அறியாதவனாதலால் இவ்வாறு உரைத்தான். ஆயின் மைந்த னின் உண்மைக் குணம் குடிலனுக்கா தெரியாது? படர்கொடியாக மனோன் மரிையை எண் ணும் குடிலன், அக்கொடி படரும் எட்டி மர. மாகத் தன் மகனை எண்ணுகிறான். அருகுள தெட்டியே யாயினும் முல்லைப் படர் கொடி படரும் பலதே வனையவள் இடமே பலமுறை யேவில் உடன்படல் கூடும் என்று குடிலன் நம்புவது உலகியலை ஒட்டியே பாம். ஆயினும் மாண்புட்ைய மனோன்மணியின் உள்ளத்தில் பலதேவனைப் பற்றிய எண்ணமே எழவில்லை. பலதேவன் தந்தை சொற்படியும் சகடரின் பேராசைட் படியும் வாணியை மணக்கப் போகிறான என்பதனைக் கேள்வியுற்று, அவனோடு காபக் களியாட்டயரும் ஆசை நாயகி ஒருத்தியின் தாய், அவ ைன ஊர்ப்புறத்தில் ஒருசார் வைகறை நேரத்தில் சண் டு, தன் மகளை மறந்து புறக் கணித்துவிட வேண்டாம் என்று மன்றாடுகிறாள். அவளுக்கு மறுமொழியாக, எவருனக் குரைத்தார் இத்தனை பழங்கதை சவமவள் எனக்கேன்? இவள் சுக மெங்கே? பொய்பொய் நம்பலை ஐயமெல் லாம்விடு பணத்திற் காக்கிழப் பிணங்துடிக் கின்றது என்று கூறும் கூற்றில் விர சம் மிகுந்துள்ளது. அரண்மனையில் திருடிய பொற்றொடி ஒன்றினை அவள் கையில் தந்து தன் கள்ளக் காதலிக்குத் தருமாறு சொல்கிறான், வாணியையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/324&oldid=856654" இலிருந்து மீள்விக்கப்பட்டது