பக்கம்:மனோன்மணீயம்.pdf/325

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ப்லதேவன் 323。 பணத்தாசை பிடித்தலையும் அவள் தந்தையினையும் பழித் துரைக்கும் பலதேவனை அத் தாய் போனபின் பலதேவனின் நண்பன் 'செவ்விது, செவ்விது இவ்விட மெத்தனை" என்று வெளிப்படையாகவே அவன் களவு வாழ்வினைப் பற்றிக் கேட்கிறான். அதற்கு பலதேவன் அளிக்கும் விடை பகுத் தறிவு மிக்க மனித இனத்திலேயே அவனைச் சேர்த்துக் கொள்ளும்படியாக இல்லை என்பது கீழ்க்காணும் அவன் கூற்றால் தெரியவரும். * ஐந்தோ? ஆறோ? அறியேன் போ! போ! இச்சுக மேககம், மெய்ச்சுகம் விளம்பில் வாணி யாயினென்? மனோன்மணி யாயினென்? அதைவிடப் படித்த அலகையா யினுமென்? கணிசத் திற்கது: காரியத் திற்கிது. இதை மறைந்து கேட்ட நடராசன் உள்ளம் கொதிக் கிறது; ஆண்கள் வர்க்கத்தையே நாராயணனிடம் பழித்துப் பேசச் செய்கிறது. புருடரே புலையர் கிலையிலாப் பதடிகள் இருளுடை கெஞ்சர் ஈரமில் உளத்தர் ஆணையு மவர்க்கொரு வினுரை அறிந்தேன் தங்ாய மன்றிப் பின்னொன் றறியார் காதகர் கடையர் கல்வியில் கசடர் என்று நடராசன் தன் நெஞ்சக் குமுறலையெல்லாம் எரி மலையென வெடித்துக் கக்குகிறான். சேரநாடு செல்லும் பலதேவன், குடிலன் ஆங்கவன் பேச வேண்டியவெல்லாம் விரிவா யெடுத்து விளம்பியிருக்கவும், புருடோத்தமனின் சினத்தைக் கிளறும் வகையில் மடமைத் தனமாக உரையாடுகின்றான். தன்னைப் பற்றி உயர்வாக "மந்திரச் சிகாமணி தந்திரத் தலைவன் குடிலேந்திரன் மகன்' என்று தன்னைப் புருடோத்தமனிடம் அறிமுகப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/325&oldid=856658" இலிருந்து மீள்விக்கப்பட்டது