பக்கம்:மனோன்மணீயம்.pdf/327

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பலதேவன் 32s - "பணம் பணம் என்றேன் பதைக்கின்றாய் பினமே" என்று பதிலளிக்கும் பொழுது, பெற்றுப் பெயரிட்டு வளர்ந்த தந்தை பிடம்-அதுவும் நாடே நடுங்கும் குடிலனிடம், அருமைத் திருமகன் பேசும் முறை இவ்வாறு அழகியதாகவுள்ளது! நாராயணன் கழுவேற்றப்பட வேண்டுமென்று அரச கட்டளை பிறக்கிறது. படைவீரர்கள் இதற்குக் காரணமான குடிலனைப் பிடிக்க ஓடிவருகின்றனர். வீரர்க்கு அஞ்சிக் குடிலனும் பலதேவனும் ஒடி ஒளிகின்றனர். பலதேவன் அந்த இடத்தில் குடிலன் சினத்தினையும் பொருட்படுத் தாமல் நாராயண்னைப் பாராட்டிப் பேசும் பண்பு ஒன்றே பலதேவனிடத்து நாம் இந்நாடகத்தில் காணும் நல்ல பண் பாகும். அறிவிலாத் தந்தையர் தம்வினை மக்களைச் சாரும்: என்று நாடகத்தில் வரும் உழவன் ஒருவன் கூறும் கூற்றின் உண்மை, குடிலன்-பலதேவன் இவர்கள் வாழ்வால் நாட கத்தில் நன்கு புலனாகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/327&oldid=856662" இலிருந்து மீள்விக்கப்பட்டது