பக்கம்:மனோன்மணீயம்.pdf/358

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

356 2. பழமொழிகள் அங்கம் 1 : களம் 2 1. முதலையின் பிடிபோல் முடிக்கத் துணிந்தனர் (38) ஒப்பு : (முதலையும் மூர்க்கனுங் கொண்டது விடா) - அங்கம் களம் 3 2. பூவையை வளர்த்துப் பூனைக் கீயவோ (110) ஒப்பு : (கிளியை வளர்த்துப் பூனைக்குக் கொடுக்கவா?) அங்கம் 1 : களம் 4 3. பரிதி வந்துழி யகலும் பனியென' (37-38) ஒப்பு : (பகலவனைக் கண்ட பணிபோல) அங்கம் 2 : களம் 1 - 4. அங்கைப் புண்ணுக் காடியும் வேண்டுமோ? (260) ஒப்பு : (கைப்புண் பார்க்கக் கண்ணாடியா?) 5. வெளுத்த தெல்லாம் பாலெனும் மெய்மை யுளத்தான்" ஒப்பு : (மின்னுவதெல்லாம் பொன்னல்ல) 6. தன்னுளந் தன்னையே தின்னும்: (163) ஒப்பு : (தன்னெஞ்சே தன்னைச் சுடும்) அங்கம் 3 * களம் 3 7. இரவியை நோக்கற்கேன் விளக்குதவி" (84) ஒப்பு : (யானை பார்க்க வெள்ளெழுத்தா?) அங்கம் 4 : களம் 3 8. நெருப்பிடை நெய் சொரிந் தற்று" (4) ஒப்பு : (எரிகிற கொள்ளியில் எண்ணெய் வார்த்தாற்போல்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/358&oldid=856728" இலிருந்து மீள்விக்கப்பட்டது