பக்கம்:மனோன்மணீயம்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனோன்மணிய நூலாசிரியர் பேராசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்கள் வாழ்க்கை வரலாறு கேரள நாட்டில் ஆலப்புழை என்னும் ஊரில் பெருமாள் பிள்ளை என்பாருக்கும் மாடத்தி அம்மாளுக்கும் கி. பி. 1855ஆம் ஆண்டு பிறந்தவரே நம் சுந்தரம் பிள்ளை அவர்கள் ஆவர். இவருடைய குடும்பம் சைவப் பற்றும், ஒழுக்கக்கோட்பாடும் உடைய குடும்பம். எனவே இவர் தேவார திருவாசகங்களையும் சமய சாத்திர நூல்களையும் இளமையிலேயே கற்றுணர்ந்தார். ஆங்கிலமும் அருந் தமிழும் பாங்குறக் கருத்துன்றிக் கற்றார். இளமையில் இவருடைய இயற்றமிழ் ஆசிரியராக விளங்கியவர் நாகப் பட்டினம் நாராயணசாமிப்பிள்ளை அவர்கள் ஆவர். இவ் ஆசிரியரிடந்தான் மறைமலையடிகளும் பயின்றார் என்பது ஈண்டுக் குறிக்கத்தக்கது. இவருடைய ஞான ஆசிரியராகக் கொள்ளத்தக்கவர் கோடக நல்லூர் சுந்தர சுவாமிகள் ஆவர். இத் தொடர்பே மனோன்மணியத்தில் சுந்தர முனிவர் என்னும் பாத்திரப் படைப்பிற்குக் காரணமாக அமைந்தது. கி. பி 1876ஆம் ஆண்டு பி. ஏ. தேர்வில் வெற்றி பெற்றார். அடுத்த ஆண்டில் இவருக்குத் திருமணமும் நடந்தேறியது. மனைவியார் பெயர் சிவகாமி அம்மாள் என்பதாகும். o கி. பி. 1877ஆம் ஆண்டு இவர்தம் ஆசிரியப்பணி தொடங்கிற்று. திருநெல்வேலி ஆங்கிலத் தமிழ்க் கல்விச் சாலையின் தலைவராக இரண்டாண்டுகள் பணியாற்றி, அக் கல்விச் சாலையே பின்னர் இந்துக் கல்லூரியாக உயர்வதற்கு உறுதுணையாக இருந்தார், பின்னர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/7&oldid=856811" இலிருந்து மீள்விக்கப்பட்டது