பக்கம்:மனோன்மணீயம்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 70 P குடில: 196. 200. குடில: "210 மனோன்மணியம் அத்திறம் முற்றும் ஒத்தவ னாய் நமக் குரிமை பூண்டநின் அருமை மகன்.பல தேவனே யுள்ளான். மேவலர் பலர்பால் முன்னம் பன்முறை துரதிலும் முயன்றுளான். அன்னவன் றன்னை அமைச்ச! ஏவிடத் தயையா யிசைவாய் நீயே. (11) ஐய மதற்கென்? ஐய என்னுடல் ஆவியும் பொருளும் மேவிய சுற்றமும் நினதே யன்றோ! உனதே வலுக்கியான் இசையா தொழிவனோ! வசையறு புதல்வன் பாலியன் மிகவும்; காரியம் பெரிது. பெரிதென்? அங்கவன் பேசவேண் டியவெலாம் . விரிவா யெடுத்துந் விளம்பி விடுக்கில்,

நலமா யுரைப்பன் நம்பல தேவன். - வருத்தம் இவையெலாங் கருத்திலுணராது. உரைத்தனர் முனிவர் உதியனவைக்கே யோசனை யின்றி நடேசனை யேவில் நன்றாய் முடிப்பனிம் மன்றல் என்றார், அவர்கருத் திருந்த வாறே! (12) குற்றமோ அதுவுங் கொற்றவ! முனிவர் அறிந்ததவ் வளவே யாகும் ஏழை! துறந்தா ரறிவாரோ துரதின் தன்மை? இகழ்ச்சியும் புகழ்ச்சியு மின்பமுந் துன்பமும் எல்லா மில்லை ஆதலால் எவருங் கட்டுக கோவில், வெட்டுக ஏரி, என்று திரிதரும் இவர்களோ நமது நன்றுந் தீதும் நாடி யுரைப்பர்? . இராச்சிய பாண சூத்திரம் யார்க்கும் நீச்சே யன்றி நிலையோ? நடேசன் ! யோசனை நன்று! நடேசன்! ஆ! ஆ! 1. பகைவர் 2. சேரன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/72&oldid=856817" இலிருந்து மீள்விக்கப்பட்டது