பக்கம்:மனோன்மணீயம்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாம் அங்கம் : இரண்டாம் களம் 79 (ஆசிரியப்பாவின் தொடர்ச்சி) கட : (தனதுள்) ஆயினும் இத்தனை பாதகனோ இவன்! பலதேவன் : எவருனக் குரைத்தார் இத்தனை பழங்கதை! சவமவ_ளெனக்கேன்? இவள் சுக மெங்கே? 60. பொய்பொய் நம்பலை, ஐயமெல் லாம் விடு. பணத்திற் காக்கிழப் பிணந்துடிக் கின்றது. சேரன் பதிக்கோரி செய்திசொல் லுதற்காச் சென்றிதோ இரண்டு நாளையிற் றிரும்புவன். இச்சிறு பொற்றொடி மைச்சினிக் குக் கொடு 65. தருகுவன் ஈதோ! மறக்கன்மின் என்னை ! (நற்றாய் போக, பலதேவனும் தோழனும் நடக்க1 தோழன் : செவ்விது! செவ்விது! இவ்விட மெத்தனை ஐந்தோ? ஆறோ? பலதே ! அறியேன். போ! போ! இச்சுக மேசுகம், மெய்ச்சுகம் விளம்பில். தோழன் 1 வாணியை மணந்தபின் பூணுவை விலங்கு. பலதே : 70. வாணி யாயினென்? மனோன்மணி யாயினென்? அதை விடப் படித்த அலகையா' யினுமென்? கணிசத் திற்கது: காரியத் திற்கிது; வாவா போவோம். வழிபார்த் திருக்குஞ் சேவகராதியர் செய்குவ ரைய , 75. எத்தனை பொழுதிங் கால து வீடுவிட்டு? ஏகுவம் விரைவில், இனித்தா மதமிலை. (பலதேவனும் தோழனும் போக) B.- கொடுமை! கொடுமை இக் கொடும்பா தகன் சொல் - 1. பேய் 2. கண்ணியம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/81&oldid=856836" இலிருந்து மீள்விக்கப்பட்டது