பக்கம்:மன்னர் பாஸ்கர சேதுபதி.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Z2 அத்துடன் இராமநாதபுரம் சமஸ்தானத்தின் கிழக்கு எல்லையில் அமைந்துள்ள இலங்கையிலும் ஐம்பத்து ஒரு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். இந்திய நாட்டின் பல பகுதிகளிலும் உள்ள மக்களது வாழ்க்கை நிலை, பழக்க வழக்கங்கள், மரபுகள் ஆகியவற்றையும், இவற்றிற்கெல்லாம் ஆதாரமாக அமைந்து திகழும் இந்தியப் பண்பாட்டையும் இந்த இளம் உள்ளங்களில் நிறைத்துக் கொள்ளுவதற்கு ஏதுவாக அமைந்து இருந் தன. இந்தச் சுற்றுப் பயணங்கள். இத்தகைய சிறந்த பயனங்களுக்கு உடனிடருந்து உதவிய அவர்களது ஆசிரியப் பெருமக்கள் கிரிட்டன் தம்பதியினரை இளவர சர் பாஸ்கரர், இராமநிாத்விர அரண்மனையில் சிறப் புத் தர்பார்' ஒன்றில் வரவேற்பு அளித்துப் பெருமைப் படுத்தினார். 5-1-1888 முதல் 24-2-1888 வரையான ஐம்பத்து ஒரு நாட்கள் இலங்கையில் மன்னர் சுற்றுப்பயணம் மேற் கொண்டபொழுது (வரைந்த குறிப்புகள் பின்னர் சிறிய நாலாக வெளியிடப் பட்டது) அப்பொழுது அவருக்கு வயது இருபது. இலங்கையில் இருந்து அவர் வாங்கி வந்த அரிய பொருள் என்ன தெரியுமா ? ஆங்கில நூல்கள் - பேகனது கட்டுரைகள்' ஸ்காட்டின் 'மந்திர தந்திரங் கள்_காலரிட்ஜின் அரங்கப் பேச்சு' மற்றும் அராபிய இரவுகள்'. இவ்விதம் மன்னர் பாஸ்கரரது நலனை கண்காணிப் பதற்கும், கல்வியை புகட்டுவதற்கும் ஆங்கில நாட்டு செவிலியரும், ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டு இருந்தனர் அல்லவா? ஆதலால், அவரது வாழ்க்கை, ஒழுங்கு கட் டுப்பாடு என்ற அடிப்படையில் அமைந்து, சிறப்பாக இயங்கிய காரணத்தினால் தமது அன்றாட வாழ்க்கை யினை முறையாக நாட்குறிப்புகளிலும், சொந்த செலவு களை கணக்குப் பதிவேடுகளிலும் அவர் பதிவு செய்து வந்தார். இந்த பதிவேடுகளில் கி பி, 1891 க்கான செல வுக்கணக்குப் பதிவேடும் கி. பி. 1 823க்கான நாட்குறிப் பும் கிடைத்துள்ளன. - -- O My Trip to India's utmost isle (Madras 1890)