பக்கம்:மன்னர் பாஸ்கர சேதுபதி.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 "பிளாக்மாஜிக்' என்ற வஞ்சனையில் ஈடுபட்டது. அன்பு ιοα, σύι Ψα και ராஜேசுவானை அரண்மனை க்கு வெளியே அழைத்துச் சென்று உலவி வந்தது போன்ற உள்ளத்தை நெகிழச் செய்யும் நிகழ்ச்சிகளும் அந்த நாட்குறிப்புகளில் பதிவாகி உள் ளன.7 இதனைப் போன்றே, இந்த மன்னரது சொந்த செலவு கணக்குப் பதிவேடு, மன்னருடன் தொடர்புடைய வாழ்க்கை நிகழ்ச்சி பலவற்றைக்கோடிட்டுக் காட்டுகின் றது நண்பர்களைச் சந்திக்கவும், நாட்டுப் பிரச்சினை களைக் கவர்னருடன் பேசித்திர்வு காணவும் அவர் அடிக்கடி சென்னை செல்வது வழக்கம். மிகக் குறைவான போக்குவரத்து வசதிகள் இருந்த அந்நாளில் இராம நாதபுரத்திற்கும் சென்னை க்கும் நேரடியான பயன வசதி இல்லாததால் அவரும் அவரது பணியாட்களும், மதுரை சென்று, ரயிலைப்பிடித்து ஈரோடிற்கும், பின்னர் அங்கிருந்து சென்னைக்கும் செல்வது வழக்கம். அவர் சென்னையில் தங்கும் பொழுது உபயோகிப்பதற்காக மதுரையிலிருந்து பிட்டன்-என்ற_கோச்-வண்டியும், குதிரைகளும் ரயிலில் கொண்டு செல்லப்பட்டன. பொன்னாலான தண்டங்களைத்தாங்கிய மெய்க்காவலர் களும் சீருடை அணிந்து மன்னருடன் சென்றனர். மதுரை, திருப்பரங்குன்றம் ஆலயங்களில் வழிபாடு, ஆங்கில, நீதிபதிக்கு விருந்து அளித்தது . சென்னை ராயப் பேட்டை உட்லண்ட்ஸ்” மாளிகையில் தங்கல் புரசை, மயிலை, திருவல்லிக்கேணி ஆலயங்களில் வழிபாடு, அர்ச்சகர், தேவதாசிகளுக்கு அன்பளிப்பு, ஆர்க்காட்டு நவாப், சென்னை கவர்னர், திருவனந்தபுரம், பொப் பிலி, மன்னர்களது தொடர்பு, பொது நிறுவனங்களுக்கு. அன்பளிப்பு, சட்ட வல்லுநர் பாஷ்யம் அய்யங்கார், பாடகர் தட்சிணாமூர்த்தி சிவன் ஆகியோருடன் அள வளாவியது, ஷேக்ஸ்பியர் நாடகம் கண்டுகளித்தது. 7. சென்னையில் உள்ள தமிழ்நாடு ஆவணக்காப்பகத் தில் இந்த நாட்குறிப்பு பாதுகாக்கப்பட்டு வருகிறது.