பக்கம்:மன்னர் பாஸ்கர சேதுபதி.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83 கின்றது. இந்தச் சிறு கையேட்டிற்குள் அதனை அடக்க இயலாத காரணத்தினால் பட்டியலை இங்கே நிறைவு செய்ய முடியவில்லை. அவரது 1893 ம் ஆண்டு ஜூன் 27ந் தேதி நாளிட்ட அவரது நாட்குறிப்புப் பதிவின்படி கி.பி. 1890-93க்கும் இடைப்பட்ட நான்கு ஆண்டுகளில் மட்டும் நாற்பது இலட்சத்திற்கும் அதிகமான ரூபாயைக் கொடை யாக் வழங்கி இருந்தார்-என்த் தெரிகிறது இரண்டு மலைகள் உள்ளன. ஒன்று தங்கத்தினாலானது. மற் றொன்று வெள்ளியிலானது இரண்டையும் உருக்கி பவு னாகவும் ரூபாயாகவும் மாற்றி மன்னரிடம் கொடுத்தால் அது அவரது சிறிதுநேர ச் செலவிற்குத் தான் பயன் படும். இதனைப் போன்றே வறட்சிக் காலத்தில் வருண ஜெபம் செய்தால் சில சமயங்களில் மழை பெய்யும் ஆனால் பாஸ்கர சேதுபதி யின் கரங்கள் நீட்டுகின்ற காலத்தில் எப்பொழுதும் பொன் மழை பொய்யும். ஆகை யில் இத்தகைய பாஸ்கர சேதுபதி பிறந்திராவிட்டால் ஆலயங்கள் சீராக இருக்காது; தமிழ்ப் புலவர்கள் வாழ்வு சிறப்படைந்து இருக்காது தருமமும் தழைத்து இருக்காது. இப்பொழுது பாடல்களைப் படியுங்கள். மேலும் 12-7-1895-ந் தேதியன்று மன்னருக்கு-இருப லட்சம் ருபாய் பற்றாக்குறை இருந்ததும் தெரிகிறது அதனால் சமஸ்தான கருவூலம் காலியாகிய இடர்ப்பாடான சூழ் நிலையிலும், மன்னரது கொடுத்துப் பழகிய கைகள் சோர்ந்து விடவில்லை. மிகவும் இக்கட்டான நிலை ஒன்று ஏற்பட்டபொழுது, நவரத்தினங்கள் இழைத்த எட்டு நவகண் மாலைகளும், முத்துக்களால் ஆன முத்தார ங் களும் மன்னரது அறையில் இருந்து, கானாடுகாத்தான் எண்ஏெ. அண்ணாமலைச் செட்டியாரது இரும்புப் பெட் டிக்கு மாறியது, ஈட்டுப்பணமாக அறுபதினாயிரம் ரூபாய் வாங்கி வரப்பெற்றது. அப்பொழுது. இது ஒரு அவசர நிலை சமாளிப்பாகக் கருதப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு ப் பின்னர், மன்னர் சமஸ்தான நிர்வாகத்தை ஆட்சிக் குழு விடம் ஒப்படைத்தார். 10. Diary Entry — 29-6–1893 இன்றைய நாணயச் செலாவணியில் இந்த தொகை இருபது கோடிக்குச் சமம்,