பக்கம்:மன்னர் பாஸ்கர சேதுபதி.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37 பெற்ற இந்தச் சாதாரணப் பணியாளரை மக்கள், அன்று முதல் 'ஆஅதிபதி' +ιμναρξτε சேர்வை” என்று பெரு மையுடன்-குறிப்பிடுவது வழக்கமாகி விட்டது. அந்தச் சேர்வைக்காரரது மாளிகை 'லட்சாதிபதி ஆறுமுகம் சேர்வை வீடு' என்றும், அந்த விடு உள்ள பகுதி 'லட்சாதி பதி ஆறுமுகம் சேர்வை சந்து” என்றும், இராமநாத புரத்தில் இன்றைக்கும் வழங்கப்பட்டு வருகின்றன. மிகுந்த அன்புடனும் அக்கரையுடனும் மன்னருக்கு ஊழியம் செய்த மற்றுமொரு பணியாளர் காதர் ராவுத்தர் என்பவர், சிறந்த மல்லர். சிலம்பம், வாள் சிண்டை, வேல் வீசுதல் ஆகியவைகளில் ஒப்பாரும் மிக்காரும் இல்லாது விளங்கிய வீரர். வெளியூர் பயணங்களின் பொழுது மன்னரது மெய்க்காவலராக உடன் சென்று வருதல் அவர் வழக்கம். 1902-ல், மன்னர் இராமேசுவரம் இராம மந்தி ாம் மாளிகையில் தொடர்ந்து மூன்று மாத காவம் தங்கி யிருந்தார் கண்ணிண் இமையாக, இரவு பகலாக, காதர் ராவுத்தர் மன்னருக்கு ஊழியம் செய்து வந்தார் உறங்கிய நிலையில் கூட காதர் என குழைந்து அழைக்கும் மன்ன ரது குரல் கேட்டு 'மகாராஜா ஆஜர்’ என்று பணிவாக பதில் அளிப்பார். ஒரு நாள் காலை இராமமந்திர மாளிகை முகப்பில் உள்ள பூந்தோட்டத்தில் மன்னர் உலாவிக் கொண்டு இருந்தார். அப்பொழுது அவருடன் வந்து கொண்டி ருந்த காதர் ராவுத்தரது இதயத்தில் ஏதோ ஒன்று அழுத்திக் கொண்டிருப்பதை மன்னரது அகக் கண்கள் உணர்ந்துவிட்டன. "காதர்! ஊருக்கு போக வேண்டுமா!' "இல்லையே! சமூகம் இப்படி ஏன் உத்திரவிடுகிறது' 'பதில் சரியாகத்தான் இருக்கிறது. ஆனால் உனது மனதுதான் சரியில்லை’. அதெல்லாம் ஒன்றுமில்லை மகாராஜா' * ஏ ன் இன்னும் மறைக்கின்றாய்? மன்னரது குரலில் கடுத்தம் தொனித்தது. _–T