பக்கம்:மன்னர் பாஸ்கர சேதுபதி.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 "மகாராஜா பல வருஷங்களாக எனக்கு ஒரு ஆசை, நாகூர் ஆண்டவர் பள்ளிவாசலுக்கு போய் வரவேண்டும் என்று, அங்கு இன்னும் பத்து நாட்களில் கந்துாரி விழா இருக்கிறது". ....... என்று தயக்கமாக காதர் பதிலளித்தார் “நாகூர் போய்வர என்ன செலவாகும்”, 'ரொம்பப் போனால் நூறு ரூபாய் தேவைப் படும் " 'அவ்வளவுதானா! குடும்பத்துடன் போய் காணிக்கையெல்லாம் செலுத்த நுாறு ரூபாய் போதுமா?’. 'மகாராஜா அது போதும்!” மன்னர் அறைக்குள் சென்று சில நொடிகளில் திரும்பி வந்தார். நூல்கயிற்றுப் பைகள் நான்கினை காதரிடம் கொடுத்தார். "இந்தா இதில் இரண்டாயிரம் ரூபாய் இருக்கிறது. நாகூர் சென்று ஆறுதலாக திரும்பி வா. உக்கிரான சாவியை அடைப்பம் சூரியன் சேர்வையிடம் கொடுத்து விட்டுப் போ', 'மகாராஜா இவ்வளவு பணம் எதற்கு!' "பரவாயில்லை ! நிம்மதியாக போப் வா' காதர் ராவுத்தருக்கு ஏற்பட்ட திகைப்பில் அவரது வாயில் இருந்து மேலும் வார்த்தை எதுவும் வர வில்லை! வி பாஸ்கர சேதுபதி தமது அன்பிற்கும் அனுதாபத் திற்கும் உரியவர்களை எவ்விதம் ஆதரித்து மகிழ்ந்தார் என்பதற்கு இந்த நிகழ்ச்சிகள் சில எடுத்துக்காட்டுக்கள் ஆகும். மேலும் இந்த நிகழ்ச்சிகள், மன்னரது அகங்கனிந்த அன்பிற்கு முன்னால், எல்லோரும் ஒரே வகையாக, ஒரே நிறையாகக் காட்சியளித்தனர், என்பதையும் புலப் 15. இந்த நிகழ்ச்சி பற்றி விவரம் தெரிவித்தவர் காதர் வழியினரும் இராமநாதபுரம் நகர்மன்ற உறுப்பினரு மான இராமநாதபுரம் திரு இ. காட்டுவா ராவுத்தர்.