பக்கம்:மன்னர் பாஸ்கர சேதுபதி.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39 படுத்துகின்றன. இந்த அன்பும் பாசமும் அவரது பணி யாளரிடமிருந்து மட்டுமல்லாமல், அவரைச் சந்திக்கின்ற புலவர், கலைஞர்களிடத்தி லும் காட்டாறாகப் பொங்கி வழிந்தது. சேது மன்னர்கள் அனைவருமே கலையார் வம் மிக்க வர்களாக இருந்தனர். அதனால் கலைஞர்களையும், புலவர்களையும் அவர்கள் போற்றிப் புரந்ததில் வியப் பில்லை. அத்துடன் அவர்களே சிறந்த பன்மொழிப் புலவர்களாகவும், பண்ணும் பதமும் தெரிந்த கலைக் குரிசில்களாகவும் திகழ்ந்தார்கள். பதினேழாம் நூற்றாண் டில் பிற்பகுதி வரை, சேது நாட்டைச் சிறப்பாக ஆட்சி செய்த ரகுநாத திருமலை சேதுபதிமன்னர். அரசவையில் பெரும்புலவர்களான அமிர்த கவிராயர், அழகிய சிற்றம் பலக் கவிராயர் ஆகியவர்களது படைப்புக்கள்ாக தள சிங்கமாலை” யும் ஒரு துறைக் கோவையும்' அரிங்கேற்றம் பெற்ற பொழுது, அந்தப் படைப்புக்களின் பாநயத்தையும் பொருள் நயத்தையும் பகுத்துப் பார்த்து, சு வைத்து மகிழ்ந்து, தரத்திற்குத் தக்கவாறு அந்த மன்னர் சிறந்த பரிசில் வழங்கியதாகச் செய்திகள் உண்டு. அடுத்து, விஜயரகுநாத சேதுபதி மன்னர் அவையில் பன விடுது தினையும் தேவை உலாவை’ யும் அரங்கேற் றிய சொக்கநாதப் புலவரும், பெற்ற வரிசைகள் பல. இதே சேதுபதிமன்னர் கோட்டைப் பட்டினம் கோபால ஐயரது வீணை வாசிப்பை மிகவும் ரசித்துக் கேட்டு அந்த இசைக் கலைஞர் நிலக்கொடை வழங்கியதுடன் அதே வினை வாசிப்பை நாள் தோறும் ஆவுடையார் திருக்கோயிலில் மேற்கொள்ளுமாறு செய்தார். இன்னும் சேதுபதி சீமையினைச் சேர்ந்த சோதுகுடி புலவர் எம். கே. எம். அப்துல் காதிறு ராவுத்தர் என்ற சான் றோர், சேது மன்னரது அரிய நட்பினைப்பெற்ற பெரு ந் த கையாக இருந்தார். மன்னரது உயர்ந்த உள் ளத்தையும் உன்னத செயல்களையும் கண்டு மனம் நெகிழ்ந்த காரணத்தால் தாம் பாடிய மதுரைத் தமிழ்ச்சங்க மான் மியம் என்ற சிற்றிலக்கியத்தில், சேதுபதிகளது செழுங் குடியையும், கொடைப் பெருமையையும் சிறப்பாக