பக்கம்:மன்னர் பாஸ்கர சேதுபதி.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

も" தமது நாட் குறிப்பில், 'அவர்கள் மிகவும் சிறப்பாக, வேதபாராயணம் செய்தனர். அங்கு வழிபாடு செய்ய வந்தவர்களுக்கு இந்த நிகழ்ச்சி நல்ல வளமான சிந்த னையை ஊக்குவித்து இருக்கும்' எனக் குறிப்பிட் டுள்ளார். ே இவ்விதம் ஆலயங்களில் நடைபெறும் வழிபாடுகளும் விழாக்களும் உணர்வு பூர்வமாகவும் ஆகம முறைப்படி யும் நிகழவேண்டும் என்பதே அவரது உள்ளார்ந்த நோக்கமாக இருந்தது. அதற்கு ஆதரவு வழங்குவதை, மன்னர் என்ற முறையில் தமது தார்மீகக் கடமையாக அவர் கருதி வந்தார். இதனைச் செயல் வடிவில் நிறை வேற்ற வேண்டும் என்பதற்காக கோவில் விழாக்களில் அவரது சமஸ்தான பரிவாரங்களுடன் அவரே முனைந்து முன்னின்று மற்றவர்களை ஊக்கப்படுத்துவதை வழக்க மாக கொண்டிருந்தார். இராமநாதபுரம் சிவன்_கோவி லில் மாணிக்கவாசகாது குருபூசையை நாள் முழுவதும் சிறப்பாக கொண்டாட் ஏற்பாடுகள் செய்ததுடன் அவ ரும் காலை முதல் இரவு வரை விர தம் பூண்டு அந்த விழா நிகழ்ச்சிகளில் தீவிரமாகப் பங்கு கொண்டார். 7 இதைப் போன்றே என்றும் இல்லாத புதிய வழக்கமாக இராமநாதபுரம் அரண்மனை ஆலயத்தில் உள்ள ராஜ ராஜேஸ்வரியம்மனை சிறப்பாக அலங்கரித்து நகரின் முக்கிய விதிகளில் உலா வருமாறு செய்தார். அன்று இராமநாதபுரம் ந்கரம் தேவலோகம் போல் அழகும் பொலிவும் பெற்றுத் திகழ்ந்தது என அவரே அகமகிழ்ந்து தமது நாட்குறிப்புகளில் பதிவு செய்துள்ளார். இன்னொரு, புதுமையையும் புகுத்தினார், மன்னர் . தனுஷ்கோடி தீர்த்தக்கரையில் ஆடி , தைத் திங்கள் ஆமாவாடகை நாட்களில் மக்கள் புனித நீராடலை மேற் கொள்ளுதல் வழக்கம், அங்கிருந்த, சுவேத மாதவர் ஆலயம் கடற்கோளால் பல ஆண்டுகளுக்கு முன்னர் அழிந்து விட்டதால் நீராடலை முடித்த பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்காக மீண்டும் பதினெட்டு கல் தொலைவு 26. Diary Entry dated. 26. 3. 1893. 27. Diary Entry 5. 6. 'I 393.