பக்கம்:மன்னர் பாஸ்கர சேதுபதி.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 ஆகின்றனர். தமிழ் வித்வான்களுக்கு பரம்பரை யாகப் பெற்றுவரக்கூடிய சாசுவத தர்மங்கள் செய்து வருவது இந்த சமஸ்தானத்தில் தொன்று தொட்டு வரும் வழக்கம். இக்காலத்து தமிழ் வித்வான்கள் மிகச் சிலராமையாலும், அச்சிலருக்கும் கவர்மெண்டார் தக்க உதவியொன்றும் செய்யாமையாலும் ... ... தங்களைப் போன்ற பண்டிதர் களையும், ஐவேஜி இல்லாத கோயில், சத்திரம், பாட சாலை, ஏழைகள் முதலியவர்களையும் பாதுகாப்பதற் கென்றே தொன்றுதொட்டு ஏற்பட்டுள்ள நமது சமஸ் தானத்து தர்ம மகமையில் இருந்து, தக்க தமிழ் வித்வா னான தங்களுக்கு...... ஆயுட்காலம் வரை, (பசலிதோறும்) தங்களுக்கு கிடைக்க...... ஏற்பாடு செய்து இருப்பதாக மன்னர் அந்த ஆவணத்தில் குறிப்பிட்டுள்ளார்.' இதுகாறும், எந்த அரசரும் எந்தத் தமிழ்ப் புலவருக் கும் செய்யாத இந்தச் சிறப்பைப் பெற்றமகாவித்வான் மனம் நெக்குரு கிப் போனார் மன்னரது கொடையை யும், தமிழ்த் தொண்டையும் எண்ணி எண்ணி பெருமித மும் பெருமகிழ்ச்சியும் அடைந்தார், இதனை. 'குவிகை தாங்கிக் குறையிர ந்தார் முனம் கொண்டல் எனப் பொழிதரு பாஸ்கரன் சிவிகை தாங்கிட ஏறிய வீறு டைச் சேதுகாவலர் தங்கவி யாகினேன் ...' 'சிவிகை தாங்கி புரந்தன ன் பாற்கரன் செய்ய பொற்களாம் பொருள் நல்கி இப்புவியெல்லாம் புகழ்புரிந்து ஒம்பினன்....' - என்ற அவரது கவிதை வரிகள் மன்னரது இந்த அரிய செயலைக் காலமெல்லாம் சொல் விக் கொண்டு இருக்கின்றன. - = 37. இந்த ஆவணத்தின் நகல் முழுமையாக, நாலின் இணைப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி யையும் பாடல்களையும் தெரிவித்தவர் மகாவித்வா னது மகன் (அமரர்) பண்டித ரா.-ராமானுஜம் அவர்கள்.