பக்கம்:மன்னர் பாஸ்கர சேதுபதி.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

G5 கண்ணாடிகளும், அழகிய ஓவியங்களும் நிறைந்து இருந் தன. தரையில் விரிக்கப்பட்டு இருந்த காஷ்மீர் கம்பளங் கள் மீது ஆங்காங்கு சோபாக்களும், நாற் காலிகளும், மேஜைகளும் போடப்பட்டு இருந்தன. ஒரு நாள் முற்பகல் வேளை, மன்னர் சோபா ஒன் நறில் அமர்ந்தவாறு, அழகிய கூண்டில் அடைபட்டு இருந்த பஞ்சவர்ணக்கிளி குழறிப் பேசிய மழலை யைக் கேட்டு மகிழ்ந்து கொண்டு இருந்தார். அப்பொழுது. பக்கத்து அறையில் ஏற்பட்ட சலசலப்பு ஓசை மன்னரது மகிழ்ச்சி யைக் குலைத்தது. அவர் அங்கு திரும்பி பார்த்த பொழுது அவரது பணியாள் ஒருவன், நீண்ட இரட்டைக்குழல் துப்பாக்கியைப் பிடித்து மன்னரைக் குறி பார்த்தவாறு வந்து கொண்டு இருந்தான். -ஏண்டா நீலமேகம்! உனக்கு பைத்தியம் பிடித்து விட்டதா? மன்னரின் ஆரவாரமில்லாத குரல் ,

  • ஆம். மகாராஜா எனக்கு வைத்தியம் பிடிக்க

வைத்து விட்டீர்கள் ' -மடையா என்ன காரியம் செய்கிறாய்” என்ற மற்றொரு குரல் வந்த திக்கில் திரும்பினான் நீலமேகம். கிறிதும் அவன் எதிர்பாராத வகையில் அவனது வலது கையில் பலமாக விழுந்த உதை அவனை நிலை குலைந்து கீழே விழுமாறு செய்தது. அவனிடமிருந்த துப்பாக்கியைப் பறித்து அவனைக் கொல்வதற்கு ஆயத்த மானான் அந்த பணியான். கசாமினாதா! வேண்டாம், துப்பாக்கியை இங்கே கொண்டுவா”. மன்னர் பதட்டத்துடன் சொன்னார். உத்தரவு மகாராஜா சாமினாதன் துப்பாக்கியை எடுத்துப் போய் மன்னருக்கு அருகில் இருந்த மேஜையில் மிகப் பணி வுடன் வைத்தான்.

  • டேய், நீலமேகம் எழுந்து வா! மன்னரது குரலில் அன்பு கலந்து இருந்தது. பைத்தியம் தெளிந்தவன் போல நீலமேகம் எழுந்து நின்றான். அவரது கண்களில் கலக் கம். கால்களில் நடுக்கம்,