பக்கம்:மன்னர் பாஸ்கர சேதுபதி.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 நமது மன்னரைப் பொறுத்த வரையில் அவர் ஒரு சமய மறுமலர்ச்சியின் மடலவிழ்ந்த மலராக வாழ்ந்தார். முதலில் தமது சமஸ்த்தானத்தின் கட்டுப்பாட்டில் இருந்த திருக்கோயில்களின் நிர்வாகத்தை தாய்மைப் படுத்தினர். அடுத்து தமிழகத்தின் ஏனைய திருக்கோயில் களுக்கு பொன்னும் பொருளும் வழங்கி அவைகளின் நித்ய் கட்டளை, திருவிழாக்கள் சிறப்பாக நடைபெற உதவி வந்தார். இதன் மூலம் சமய அறிவும் தெளிவும் மக்கள் பெறுவர் என்பது மன்னரது முடிவு சமஸ் தானாதிபதி என்ற முறையில் இவை தமது 'ராஜ தருமம் என எண்ணி வந்தார். இந்த சமயத்தில் அமெரிக்க நாட்டில் அனைத்துச் சமயங்களின் பேரவை கூடவிருக்கிறது என்ற செய்தி மன்னருக்கு கிடைத்தது. தாம் மேற்கொண்டுள்ள தெய் விகத் திருப்பணிகள் அனைத்திலும், இந்தப் பேரவை யில் கலந்து கொண்டு இந்து சமயச் சிறப்பையும் இந்திய நாட்டின் பண்பாட்டுக் கலப்பையும் மேநாட்டார் புரிந்து கொள்ளச் செய்வது தமது கடமையெனக் கருதினார். இந்திய நாட்டின் எந்த மாடாதிபதியும், சமஸ்தான பதி யும், சனாதனவாதியும் எண்ணிப் பார்க்காத செயல் இது. மதுரை ஜில்லா கலெக்டராக இருந்த திரு. கரோல் என்ற வெள்ளையர் மூலமாகத் தமது பயணத்திற்கு ஏற்பாடுகளைச் செய்தார்.49 இதற்கிடையில் கன்னியாகுமரிக்கு யாத்திரையாகத் வந்த சுவாமி விவேகானந்தரை (நரேந்திரர்) சென் னை நண்பர் ஐஸ்டிஸ் சுப்பிரமணிய ஐயர் மூலமாக கேள்வியுற்றுச் சந்தித்தார். அவருடன் ஆன்மீக சிந்தாந்தச் செய்திகளை அளவளாவி, பரிமாறிக் கொண்ட பின்னர், தமது பயனத் திட்டத்தை மன்னர் மாற்றிக் கொண்டார். எவ்வளவுதான் சமய சித்தாந்தங் களைக் கற்றுத் தெளிந்து, எளிதாக எடுத்துச் சொல்லும் தகுதிகள் பெற்று இருந்தாலும், இல்லறத்தில் இருக்கும் TTTTTTTTTTTTTTT TTTTTT TTTTTTTTTT TTTTTTTTTTTTTTTTTTT TTTTTTT TTTTTTT TTTTTTT TTTTTTT TTTTTTTTTT TTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTS 41 Raja Baskara Sethupathy Diary entry dated 3-1893