பக்கம்:மன்னர் பாஸ்கர சேதுபதி.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

וו களின் வருவாய் இத்திருக்கோயிலின் பராமரிப்பிற்கு ஆண்ணிவேர்ாக அமைந்துள்ள து குறிப்பிடத்தக்கது. கோயிற் கருவறை, திருமதில், பிரகாரங்கள் கோபுரம், தெப்பக்குளம், சந்நிதிகள், கல்யாண மண்டபம், அனுக்க மண்டபம், பள்ளியறை என்ற பல்வேறு அமைப்புகளு டன் கூடிய திாவிடகட்டுமானத்தணுக்கு. எடுத்துக் காட்டாக இக்கோயில் விளங்கி வருவதற்கு இச் சேதுபதி மன்னர்களது அற உணர்வும், தொண்டுள்ள மும், வாரி வழங்கிய பெரும் பொருளுமே 'கருவியாக இருந்தன என்பதைக் கட்ந்த ஐந்நூறு ஆண்டுகால வரலாறு இனிதே எடுத்துச் சொல்கின்றது. இத்தகைய சமயப்பணிகளுடன் நின்று விடாமல் இம்மன்னர்கள் சமுதாயப் பணிகளிலும் குறிப்பாக தமிழ் வளர்ச்சிப் பணியிலும் முனைந்து நின்றனர். முவேந்தரும் முடிந்து, சங்கமும் போய், கோவேந்தர் கொடையுமற்று, பாவேந்தர்கள் இலவம் பஞ்சாய்ப் பரிதவித்தபொழுது, அவர்களுக்குத் தேவேந்திர தருவாக சேதுபதி மன்னர்கள் விளங்கினர் அழகிய-சிற்றம்பலக்டகவிராயர். அமிர்த கவிராயர், மீர் ஜல்வாதுப் புலவர் , சர்க்கரைப் புலவர், அட்டாவதானம் சரவணப் பெருமாட் கவிராயர், சதாவ தானம் சரவணப் பெருமாள் கவிராயர், மதுரகவி, த ல மலைகண்டதேவர், திருச்சிற்றம்பல ஐயா, சிவசம்பு புலவர் ஆகிய பெரும் புலவர்கள், சேதுபதி மன்னர்களது தண்ணளியில் திளைத்து, பரிசிலும் பாராட்டும் பெற்ற துடன் அவர்களது வாழ்க்கையில் வறுமை தொடராது இருக்க, வளமான ஊர்கள் பலவற்றையும், சேதுபதி மன்னர்களிடம் தானமாகப் பெற்று வாழ்ந்தனர். தள சிங்கமாலை, ஒரு துறைக் கோவை, பன விடுதுாது, விஞ்சைக்கோவை, மருதுார்ப்புராணம், மருதார் அந்தாதி, தேவை உலா, சேதுபதி விறவி விடுதுாது சேதுபுராணம், ம்ற்றும் முத்துராமலிங்க சேதுபதி ஒரு துறைக் கோவை, பாஸ்கர சேதுபதி கல்லா டக் கலித்துறை, தான் மனிைக் கோவை மங்களேசுவரி பிள்ளைத் தமிழ் ஆகிய பிற்காலப் படைப்புக்களுக்கும் முழு முதற் காரணங்கள் இவர்கள் வழிவந்தோர்.