பக்கம்:மன்னர் பாஸ்கர சேதுபதி.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 ஆதீன மடத்தில் தங்கினார். ஆம்! திருமடத்தில் மகா ராஜா தங்கி வாழ்ந்தார். அவர் விரும்பிய நிறைவான, நிரந் தர அமைதி அங்குதான் கிடைக்கும் என்பதை அவரது உள்ளுணர்வு அவருக்கு உணர்த்தி இருத்தல் வேண்டும் அமைதி தவழும் சூழ்நிலையல் அமைந்துள்ள கல்லி டைக் குறிச்சி மடத்தில், மவுனமாகப் பொழுது போக் கிக் கொண்டிருந்த மன்னருக்கு முதுகில் பிளவை எனப் படும் கட்டியொன்று ஏற்பட்டது. சிறிது சிறிதாக அத னால் வலியும் வேதனையும் அதிகமாகிக் கொண்டிருந் தது கடவுள் சிந்தனையிலும். தியானத்திலும் மிகுதியாக ஈடுபட்டிருந்த மன்னர் இந்த சிறு உபாதையை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை. அதற்கான வைத்தியத்தி அலும் ஈடுபடவில்லை. ஆனால், அந்தச் சிறுகட்டி அவரது பொன் னான புகழ் வாழ்வை அழித்து விடும் வாளாக அமைந்து விட்டது! அற்பம் எனக் கருதியதால் விளைந்த பேரிழப்பா? அல்ல. விதியின் விளையாட்டா! அன்று மார்கழி - ஆருத்திரா தரிசனத் திருநாள், மிகுந்த சிரமத்துடன் காலைக் கடன்களை முடித்த பாஸ் கர சேதுபதி மன்னர், படுக்கையில் சாய்ந்து அமர்ந்து இருந்தார்.அப்பொழுது மன்னரது உடல் நலிவைக் கேள்வியுற்ற ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர் என்ற இசைப் புலவர் மன்னரைப் பார்ப்பதற்காக திரு மடத்திற்குள் வந்தார். அன்புடன் வரவேற்ற மன்னரை, அவரது உடல் நலிவு பற்றி அக்கரையுடன் அவர் விசாரித் தார். பலமுறை இராமநாதபுரம் அரண்மனையில் மன் ன ரைக் கண்டு மகிழ்ச்சியுடன் அளவளாவியும், தமது இசைத் திறமையை காட்டித் பரிசில்களையும் பெற்று வந்த பாகவதருக்கு மன்னரது நிலை மிகுந்த வேதனை யை அளித்த த. மன்னர் பாகவரது பேச்சை இசையின் பால் திருப்பினார். மன்னரது வேண்டுகோளின் படி பாகவதரும் மோகனராகத்தில் கீர்த்தனம் ஒன்றை மிக வும் உருக்கமாகவும் இனிமையாகவும் பா டி மு. டித்தார். மன்னருக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.