பக்கம்:மன்னர் பாஸ்கர சேதுபதி.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3O சிவபாக்கியம் நாச்சியார் இரு ஆண்மக்களையும் ஒரு பெண் மகவையும் பெற்றுக் கொடுத்தார். சேதுபதி மன்னர் தமது இருபத்துயெட்டாவது வயதில் ஊர்க்காடு ஜமீன்தார் கோட்டிலிங்க சேதுராய ரது மூத்த மகளான சிவகாம சுந்தர நாச்சியாரையும் மணந்து கொண்டார். ஊர்க்கா டு ஜமீன்தாரும் அவரதுகுடிகளும் பல நூற்றாண்டு களுக்கு முன்னர் இராமநாதபுரம் சீமையிலிருந்த்தெற்கே நெல்லைச் சீமைக்குக் குடிபெயர்ந்தவர்கள் பெரிய தாலி யினை மங்கள அணியாகக் கொண்ட கோட்டை மறவர் என்ற கிளையைச் சேர்ந்தவர்கள் இவர்கள். சேது நாட்டி லிருந்து குடிபெயர்ந்ததால் தங்களது இயற்பெயரின் விகுதியாக சேதுராயர் என்ற பட்டத்தையும் இணைத்துக் கொண்டனர். பல ஆண்டுகளுக்கு முன்னர் விடுபட்ட உறவினை மீண்டும் தொடரும் முகமாக இந்த த் திருமணம் நடைபெற்றது. -ജുs:1് விதி யின் விளையாட்டு வேறு விதமாக இருந்தது. இந்த மங்கையர்க்கரசியும், மகப்பேறு எய்த வில்லை. மேலும் அவரது ஏழு ஆண்டுகால மண வாழ் வினுக்கு இறுதியும் ஏற்பட்டது. மன்னர் பாஸ்கரர் மறைந்த சில மாதங்களுக்குள் மனம் நிறைந்த கணவர் இல்லாத கைம்மை வாழ்வினைக் காலமெல்லாம் தொடர விரும்பாத இந்த மங்கை நல்வாள் தன்னையே மா ப்த்துக் கொண்டார். இராமநாதபுரம் அரண்மனை வரலாற்றில் முன்னும் பின்னும் நிகழாதது இந்த அவல நிகழ்ச்சி! பெரிய தந்தையார் இராணி பர்வத வர்த் தி னி நாச்சியாரின் கணவரும் இராமநாதபுரம் சமஸ்தா னாதிபதி யுமான ராமசாமி சேதுபதி ஆண் வாரிசு இல்லாமல் அகால மரணமடைந் தார். ராணியார் தமது தங்கையின் மக்களான இளவல் முத்துராமலிங்கத்தை சுவி கார புத்திரனாகவும் அவரது தமையன் பொன்னுச்சாமியை தமது நிர்வாகியாகவும் நியமனம் செய்தார். பொன்னுச்சாமித் தேவர் கி. பி 1857ல் இருந்து 1868 வரை சமண தானப் பணியை ஏற் றிருந்தார். இவர் பாஸ்கர ரது பெரிய தந்தை ஆவார்.