பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஹீரோ 姆密 'சந்தோஷம் மிகுந்த குழந்தை' என்று நினைத்தான் மாதவன். 'எனக்கு உங்களை ரொம்பவும் பிடித்திருக்கு லார்’ என்று பாலச்சந்திரன் மாதவனிடம் சொன்னன். அவர்கள் இருவரும் பழக ஆரம்பித்துச் சில தினங்கள் சென்ற பிறகு தான் சொன்னன். - "அப்படியா ரொம்ப சந்தோஷம் என்ருன் மாதவன். பிடிக்காதா பின்னே, உன் இஷ்டம் போலவே எல்லாக் காரியங்களையும் செய்யலாம் என்று ஆதரிக்கிறபோது: என அவன் மனக்குறளி கனைத்தது. "அதனுலே இப்ப உங்களுக்கு இதோ ஒரு அன்பளிப்பு" என்று கையை நீட்டினன் சந்திரன். அதில் இனிய சாக்லெட் துண்டுகள் மூன்று பளிச்சிட்டன. மாதவன் அவற்றை எடுத்துக்கொண்டான். 'எனக்கு சாக்லட்டு என்ருல் உயிர் என்ருன் பையன். ‘சாக்லட்டுகளை மட்டுமே தின்று ஒருவன் உயிர் வாழ முடியுமா என ஆராய்வது அருமையான விஷயமாகத் தா னிருக்கும். பயனுள்ள, சுவை மிகுந்த காரியமாகவும் அமையும்." "ஆனால் பெரியவங்க அடிக்கடி கண்டிக்கிருங்க, ஸார். ஏய் சாக்லட்டு நிறையத் தின்னதே; பல்லு கெட்டுவிடும்: வயிறு கெட்டுப்போம் என்றெல்லாம் மிரட்டுகிருங்களே? "சின்னவர்களைக் கண்டிக்காமலும், அடிக்கடி அதட்டியும் அடித்தும் மிரட்டாமலும் இருந்துவிட்டால் அவர்கள் பெரிய வர்கள் என்பது எப்படித் தெரியும்? தங்கள் சூரத்தனங்களே எல்லாம் அவர்கள் பையன்களிடமும் சிறுமிகளிடமும் தானே காட்ட முடியும்!" மாதவனின் பேச்சு மாணவனுக்குப் பிடித்திருந்ததில் வியப்பெதுவும் இல்லையே!