பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஹீரோ $97 பலத்தையும் பலவீனத்தையும் விழிப்புடன் கவனித்து உரிய முறையில் படையெடுத்துத் தாக்குவதற்கு வேளையும் வழியும் தேடுகிற உளவாளிபோல் அவனும் கணித்து வந்தான்; காத்திருந்தான். அதே சமயத்தில் அவன் உள்ளத்தில் கனன்று கொண் டிருந்த வெறுப்புத் தீ அணைந்து போகாமலும் கவனித்து வந்தான். உல்லாச வாழ்வு வாழ்கிற சீமான்களையும் ஒய்யாரி களையும் காணும்போதெல்லாம், இப்படி வாழ்வதற்கு இவர் களுக்கு என்ன தகுதி இருக்கிறது?’ என்று சீறியது அவன் மனம், -இப்போது சுக செளகரியங்களோடு வாழ்கிறவர்கள், செல்வமும் சிறப்பும் பெற்றுள்ளவர்கள் போன ஜன்மத்தில்’ புண்ணியம் செய்தவர்களாம்! இதுபோன்ற அபத்தமான கருத்து வேறு ஏதாவது இருக்க முடியுமா? இன்று அவர்கள் நடத்துகிற வாழ்வு முறைகளைக் கவனித்தால், அவர்கள் முன்பு புனிதராய்-புண்ணியராய்-நல்லவராய்க் காலம் கழித்திருப்பார்கள் என்று தோன்றவில்லை. புண்ணியம் செய்து, மறுபிறப்பில் சீரும் சிறப்புமாக வாழும் பாக்கியம் பெற்றவர்கள் இந்த வாழ்வில் பன்றித்தன வாழ்வு வாழ்வ தேன்? இப்படி வாழ்வதற்காக, ஒரு ஜன்மம் பூராவும் நல்லவகை கஷ்டப்பட வேண்டுமா? இப்பொழுது மோச மாக வாழ்வதற்காக அடுத்த ஜன்மம் தொல்லைகள் நிறைந்ததாக அமையும் என்று சொல்வார்கள். உத்தம வாழ்வு வாழ்ந்ததற்குப் பரிசாக சீர்கெட்ட வாழ்வு வாழி வசதிகளும் பக்குவ நிலையும் அளித்துவிட்டு, அப்புறம் இப்படி வாழ்ந்தாயே!” என்று தண்டனை கொடுக்க முனைவதில் என்ன நியாயம் இருக்கமுடியும்? இவ்வாறு வாழ்க்கை நியதிகளை வகுக்கும் சக்தி-அது எதுவாக இருந்தாலும், அதன் பெயர் என்னவாயிருப்பினும்-கொடியது; நேரிய பண்புகளற்றது: அறிவற்றதும்கூட! மாதவனின் சிந்தனை தடம் புரண்டு ஓடுகிறபோது, அவன் கால்களும் எங்கெங்கோ நடக்கும். அத்தகைய சந்தர்ப்பம் ஒன்றிலே விசித்திரமான சம்பவம் எதிர்ப்பட்டது. 4.