பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஹீரோ §§ శివాతా நாயகியாகத்தான் இருப்பாள்...” வாழ்க்கையை அனுபவிக்கத் துணிந்த எவளாகவேனும் இருப்பாள்..." அவன் உளக்கொதிப்பு தணிவதற்கு வெகுநேரம் பிடித் தது. அதற்குள் அவ்விருவருக்கும் அவன் அர்ச்சித்த ஏச்சுக்கு ஒரு அளவு கிடையாது. அப்படியும் திருப்தியுருத அவன் மனம் இருக்கட்டும்; அந்த முகத்தை நான் மறக்கமாட் டேன். நான் சிரிப்பதற்கு உரிய காலம் ஒன்று வரும். கடைசியாகச் சிரிப்பவனே வெகு நேரம்வரை சிரிப்பான் என்ருெரு வசனம் இருக்கிறதே, அதை மெய்ப்பித்துக் காட்டுவேன் என்று முணுமுணுத்தது. பவானந்தம் பெரிய மனிதர்' என்று பெயர் பெறுவ தில் மிகுந்த அக்கறை காட்டி வந்தார். தாம் "ரொம்பப் பெரியவர் என்ற நம்பிக்கை அவருக்கு உண்டு. அப்பாவி ஜனங்களுக்கு அது தெரியவில்லையே! அவரிடம் பணமும் சொத்தும் நிறையவே இருந்ததால், தமது ஆசையை எளிதில் பூர்த்தி செய்து விடலாம் என்ற நம்பிக்கையும் இருந்தது. அது வெகு சீக்கிரமே நிறைவேறிவிடும் என்றுதான் மாதவனுக்குத் தோன்றியது. பவானந்தத்தைக் கண்டு போக வந்தவர்களை எல்லாம் அவன் அளவிட்டதஞல் எழுந்த எண்ணம் அது. கலைஞர்கள் என்று சொல்லிக்கொண்டவர்களும், கவிஞர் கள் எனப் பெயர் பண்ணியவர்களும், பத்திரிகை ஆசிரியர் கள் என வெளிச்சமிட்டவர்களும், அரசியல் தலைவர்கள் என்று விளம்பரப்படுத்திக்கொள்கிறவர்களும் அவரைச் சந்தித்துப் பேச வந்தார்கள். அவருடைய மேலான் யோசனை களையும், சுயம்புவான அபிப்பிராயங்களையும் பொறுமை யோடு கேட்டு மகிழ்ச்சி தெரிவித்தார்கள். அவருடைய அபத்தக் கருத்துக்களைக்கூட ஆகா, அபார ஐடியா!' என்று பாராட்டி ஆரவாரித்தார்கள்.