பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஹீரோ 輩尊5。 கண்ணுடிக் கோலிகள் போன்ற-உணர்ச்சி எதையும் பிரதி பலிக்காத-சலனமற்ற கண்களையும் பார்த்தபோது, இந்த மாமிசப் பர்வதம் எதற்காக உயிர் வாழ்கிறது? இதனுல் யாருக்கு என்ன பிரயோசனம்' என்றுதான் மாதவன் எண்ணிஞன். - அவளைப் பார்த்துப்போக, பெரிய இடத்து அம்மாள்கள் அநேகர் விஜயம் செய்வது வழக்கம். அவர்களில் சிலர்விசாலாட்சி மாதிரி பணப் பெருக்கத்தையும் சுகவாசத்தை யும் அறிவிக்கும் அளவு பெரியவர்களாகத்தான் காட்சி தந்தார்கள். பகட்டான பட்டாடையும், மின்னும் ஆபரணங் களும், பெருமித நடையும் தோரணையும் அவர்களது செல்வப் பெருக்கைப் பிரகடனப்படுத்தும். அவர்களைக் காணும்போதெல்லாம் மாதவனின் மனக் கசப்பு மிகும். 'உண்பதும், உடல் அவஸ்தைகளைத் தீர்த்துக் கொள்வதும் தவிர வேறு உழைப்பு என்பதையே அறியாத சோம்பேறிப் பிண்டங்கள். மனித உணர்ச்சியற்ற பதார்த்தங் கள். பெரும்பாலர் ஒருவேளேகூட வயிருற உண்ண முடியாமல் வாடி மெலிகிற நாட்டில், அவர்களைப்பற்றிய பிரக்ஞையே இல்லாமல் உண்டு கொழுத்து உல்லாசமாக வாழ்கிற இந்தச் சதைக் குன்றுகளுக்கு யார் பாடம் கற்றுக் கொடுப்பது? வசதிகள் வஞ்சிக்கப்பட்டுள்ள பெரும்பாலரும் உணர்வுபெற்று உரிமைக் குரல் கொடுத்து ஒன்றுபட்டுக் கிளம்பினுல்தான் இவர்களுக்குப் புத்தி புகட்ட முடியும். அந்தக் காலம் என்று வரப் போகிறது: அவன் உள்ளம் உலேக்களம் ஆகிவிடும். அனல் மூச்சு பொங்கி எழும். செயல்திறமற்ற வெறும் கோபத்தால் குமைவான் அவன். இவர்கள் எப்படியும் பாழாகட்டும்: வாழ முடியாத மிகப் பலரும் எவ்வாறும் நாசமாய்ப் போகட்டும்! நான் வாழ்ந்து அனுபவிக்க வேண்டும். காலக் கிண்ணத்தில் தரப்படுகிற வாழ்க்கை மதுவை அடிமண்டி வரை உறிஞ்சிச் சுவைத்துச் சகலவித ருசிகளையும் ரசித்து மகிழவேணும். அதற்கு முக்கியமானது பணம். நினைத்ததை எல்லாம் கைக்கு எட்டும்படி செய்ய வல்ல மாய சாதனமான