பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 மன்னிக்கத் தெரியாதவர் மந்தகுணமும் பெற்றவராய்க் காணப்பட்டார். எப்பொழுதும் வேலைமீதும், பணம் பண்ணுவதி லுமே கருத்தாக இருந்தார். அதஞல் அவர் மனைவி பொழுதுபோக்குக்கும் உல்லாசத்துக் கும் இளைஞர்களை நாடியதில் விசித்திரம் எதுவுமில்லே. தனக்குக் கிடைத்த பு திய சிநேகிதியின் குளுதிசயங்களைப் பற்றி மாதவன் வெகுவாகக் கவலைப்படவில்லை. இன்று அவளுக்கு என்மீது பிரியம் ஏற்பட்டிருக்கிறது. அதேபோல் திடீரென்று அவள் அன்பு வற்றிப்போகலாம். அதைப்பற்றி எல்லாம் நான் வீளுக எண்ணி என் மனசைக் குழப்பிக் கொள்வானேன்? நிகழ்காலம் இனிய பசுமை பெற்றதாகத் திகழ்கிறது. அதி போதும் என்றே அவன் கருதினன். - அவன் பவானந்தம் வீட்டுக்கு வந்து ஆறேழு மாதங்கள் ஆகியிருக்கலாம். வரவர அந்தச் சூழ்நிலையும் அங்குள்ள விதர்களும் அவனுக்கு அலுப்பு ஏற்படுத்துவதாகவே அவன் நினைத்தான். தனது லட்சியப் பாதையில் மேலும் முன்னேறவேண்டுமேயல்லாது, தேங்கி நிற்பதைத் தான் இரும்புவதற்கில்லை என்று அவன் மனக்குறளி முனங்கியது. ஆகவே அந்த இடத்தைவிட்டு வெளியேறுவதற்கு ஏற்ற சந்தர்ப்பத்தை அவன் நோக்கியிருந்தான். ஒருநாள், விரும்பத்தகாத-அதாவது பவானந்தம் விட்டாரின் நோக்கிலேதான்-நிகழ்ச்சி ஒன்று நடந்து விட்டது. பாலச்சந்திரனுக்கும் வேருெரு சிறுவனுக்கும் சண்டை பிறந்தது. அந்தப் பையன் வெளியே எங்கிருந்தோ வந்து இந்த விட்டுக் காம்பவுண்டுச் சுவர்மீது ஏறி உட்கார்ந்திருக் இருன். பாலுதான் அவனே முதலில் பார்த்தான். ஏய் திருட்டுப்பயலே, இறங்கிப்போடா! என்று கூவிஞன். அந்தச் சிறுவன் பற்களைக் காட்டினனே தவிர, பயப் பட்டானில்லை. போடாங்கிறேன், நீ என்னடா இளிக்கிறே? ஒடிப்போறியா, இல்லே...' என்று மிரட்டினன் பாலு. ! நீ சாப்பிடுவ, போடா பொட்டைப் பையா' என்று கத்தினன் சுவர்மேல் இருந்தவன்.