பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஹீரோ 1 #3 வாய்விட்டுக் கூற அன்றுதான் நல்லநாள் பார்த்திருந்தாள் போலும்! அவள் ஓடிக் குதித்து விளையாடிக்கொண்டிருந்ததைப் பெரும் தொந்தரவாகக் கருதிய தாய் சீறி விழுந்தாள்."ஏட்டி, பொட்டைக் கழுதை, இப்படியா திங்குதிங்கென்று குதித்துக் கூத்தாடுவது? அமரிக்கையாக ஒரு இடத்திலே உட்கார்ந்து ஏதாவது செய்யேன்” என்ருள், நீ ஒடியாடி விளையாடாததுஞலேதான் இப்படி யானேக் குட்டி மாதிரி ஆகியிருக்கிறே. பொம்பிளை இப்படியா செக்கு மாதிரி வளருவது? குனிஞ்சு நிமிர்ந்து வேலை வெட்டி செஞ் சிருக்கணும். தினசரி அஞ்சாறு மைலாவது நடந்து பழகனும், நீயும் சரி, உன்னைப் பார்க்க வருகிறவங்களும் சரி, பூதங்கள் மாதிரி வளர்ந்து..." பேபி மேற்கொண்டு பேசவில்லை. "ஐயோ அட கடவுளே! ... ஷாக்கிங் இது டு மச் என்று எட்டு வீட்டுக்குக் கேட்கும்படி ஓலமிட்டாள் விசாலாட்சி அம்மாள். தான் செய்துகொண்டிருந்த அலுவலை அப்படியே போட்டுவிட்டு, ஏன்? என்ன நடந்தது?’ என்று பதறியடித்து வந்தார் பவானந்தம். - "என்ன நடக்கனும்? இதைவிட வேற என்ன நடக்கணும்? உங்க அருமை மகளையே கேளுங்கள்’ என்று அவள் கூச்ச லிட்டாள். "பேபி, என்ன விஷயம்?’ என்று விசாரித்தார் தந்தை. பேபி நடந்ததைச் சொல்லத் தயங்கவே இல்லை. "இப்படிப் பேச உனக்கு வெட்கமாயில்லை? பெரியவங் களிடம் இதுமாதிரிப் பேசுவது தப்பு என்று தெரியாது உனக்கு?’ என்று அதட்டினர் பெரியவர். "உண்மையைச் சொல்வதிலே என்ன அப்பா தப்பு? உள்ளதை எடுத்துச் சொல்ல ஏன் வெட்கப்படனும்?"