பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

置星参 மன்னிக்கத் தெரியாதவர் வாருமாச்சு, கீருமாச்சு: டேய் சந்தர், ஏய் பேபி, உள்ளே போlங்களா? சவுக்கை எடுக்கட்டுமா?’ என்று ஆவேசமாக எழுந்தார் தந்தை. - குழந்தைகள் அஞ்சி நடுங்கி மறைவிடம் தேடிஞர்கள். "குழந்தைகளே அடிப்பதுதான் அவர்களைக் கெடுக்கும் வழியாகும். குழந்தைகளே அடிப்பது மகா மடத்தனம் என்று அறிஞர்கள் அநேகர் எழுதியிருக்கிருர்கள்...' என்று மாதவன் பேசவும், அவருக்கு எரியும் தீயில் பெட்ரோல் ஊற்றுவது மாதிரி ஆயிற்று. சரிதாம் போடா, அயோக்கிய நாயே!” என்று சிறிப் பாய்ந்தார் அவர். ஒவ்வொருவனும் தன்னையே உலகத்தில் காண்கிருன். தன்னைக் கொண்டே உலகத்தை எடை போடுகிருன்..." "ஏய்... இங்கேருந்து போறியா, இல்லை. . . . மாதவன் முறுவல் பூத்தான். "ஐயா. ஒரு முக்கிய பாயிண்ட். தமிழ் நாட்டுப் பலகார வரிசைகளில், இனிப்பு ரகத்திலே மோதகம் என்பதும் சேரும். முறுக்கு, சீடை, தேங்குழல் இதெல்லாம் தமிழர்களின் கண்டுபிடிப்புதான். உங்கள் ஆராய்ச்சி நூலில் இந்த உண்மையை எழுத மறந்து விடாதீர்கள்’ என்று அமைதியாகச் சொன்னன். அவர் பதிலுக்குக் காத்திராமல் அங்கிருந்து நகர்ந்தான். 19தேவனின் பொருள்கள் எல்லாம் ஒரு சிறு பெட்டிக் குள் அடங்கிவிட்டன. அந்தப் பெட்டியை கையில் பிடித்த வஞய் அவன் முச்சந்தி ஒன்றில் நின்றன். இனி எங்கே போகலாம்? எங்கு தங்குவது? - இப்பிரச்சினையுடன் ஒவ்வொரு வீதியாக மாறி மாறிப் பார்த்து நின்றபோது, வசந்தாவின் கார் வருவது தென்பட்டது. அட இம்முறையும் அதிர்ஷ்டம் நம் பக்கத்தில் தான் இருக்கிறது போலும் என்று உளம் மகிழ்ந்தான் அவன்.