பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蓝莓岛 மன்னிக்கத் தெரியாதவர் கொண்டிருந்தது. அது ஒட்டவில் டியன் சாப்பிடுகையில் விளங்கிற்று. நீங்கள் எங்கள் வீட்டிலேயே தங்கியிருக்க முடியாது..." என்று ஆரம்பித்தாள் வசந்தா. தெரியும். அந்த எண்ணம் எனக்கு இல்லவுமில்லை. அப்படி நான் நினைத்திருந்தால் நான் முச்சந்திப் பிள்ளையா ராக நின்று பொழுது போக்கியிருப்பேனே என்ன?” நீங்கள் தவருக எண்ணிவிடக்கூடாது. எனக்கு உரிமை கள் நிறையவே இருந்தாலும், நான் சுதந்திரமானவள் அல்ல..." - “எவர் பேச்சையும் நான் தவருகக் கருதுவது கிடையாது. மேலும் நமக்குள் சமாதானங்களும், காரண காரிய விளக்கங்களும் தேவை இல்லை’-என்று தீர்மானமாகத் தெரிவித்தான் மாதவன். சிறிது தேரம் யோசனையில் ஆழ்ந்திருந்தாள் அவள். பிறகு, உங்களுக்கு சினிமா உலகத்தின்மீது வெறுப்பு எதுவும் கிடையாதே?’ என்று கேட்டாள். மாதவன் நல்ல தமாஷை அனுபவிப்பதுபோல் உரக்கச் சிரித்தான். அவள் விஷயம் புரியாதவளாய், என்ன? ஏன் சிரிக்கிறீர் கள்?’ என்ருள். "இந்த உலகத்தில் உள்ள சகலவற்றின்மீதும் எனக்குத் தீவிரமான வெறுப்பு உண்டு. சினிமா உலகம் மட்டும் விதி விலக்கா என்ன?” "ஏன் கேட்கிறேன் என்ருல், சினிமா உலகத்தில் ஈடு பட்டு உழைக்க நீங்கள்...” "வாய்ப்புக் கிடைத்தால் எந்த உலகத்திலும் எந்த வேலையானலும் பார்க்க நான் தயார். நரகலோகத்துக்குப் போக வேண்டுமானலும் நான் மகிழ்ச்சியோடு போவேன்."