பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

露露戟 மன்னிக்கத் தெரியாதவர் இல்லை. சொந்தத்திலே படம் பிடிக்கத் துணிந்திருக் கிருரே என்பதளுல் விசாரித்தேன். வேருெண்ணுமில்லை’ என்று இழுத்தான் அவன். - பணம் மிகுதியாகப் பெற்றவர்கள்தான் படம்பிடிக்க முன்வருவார்கள் என்று நீங்கள் நினைத்தால், அது தப்பு. பணம் ஒரு சிலரிடம் ரொம்ப நிறைய இருக்கிறது. அதைச் செலவு செய்யும் வழி நமக்குத் தெரியும்; செலவு செய்யாத வர்களின் பணத்தை எடுத்து, வாரி வாரிச் செலவு செய்யும் தகுதி நமக்கு இருக்கிறது என்ற தன்னம்பிக்கை ஏற்பட்டால் போதும், நீங்கள்கூட ஒரு பட முதலாளி ஆகிவிடலாம்’ என்ற வசந்தா தனது பேச்சை ரசித்து அதிகமாகச் சிரித் தாள். டோதிபதி பிறவிப்பெருமாள் வசந்தாவின் வார்த் தைக்கு மறு வார்த்தை சொல்லவில்லை. மாதவனைத் தமது விடிவெள்ளி புரடக்ஷன்ஸி'ல் சேர்த்துக்கொண்டார். இனி மேல் நீங்க கவலைப்படவே வேண்டாம். இவரு நம்ம ஆளு ஆயிட்டாரு இன்று முதல்’ என்ருர் முதலாளி. அவர் கூறியபடியே கவனித்துக்கொண்டார். மாதவ னுக்கு அளிஸ்டன்ட் என்ற பொறுப்பு அளிக்கப்பட்டது. யாருக்கும், எதற்கும், எப்பவும் அஸிஸ்டன்ட் ஆகப் பணி புரியலாம் அவன். முதலில் மாதம் இருநூறு ரூபாய் சம்பளம் என்று அறிவித்தார் அவர். - இவ்வளவு ரூபாயை நான் எப்படிச் செலவு செய்யப் போகிறேன்!” என்று மலைத்தான் மாதவன். சாப்பாடு இலவசம். தங்குமிடம் சும்மா. எங்காவது போக வேண்டு மானல் கம்பெனிக் காரிலேயே போகலாம். அப்புறம் என்ன செலவு ஏற்படப்போகிறது!’ என்று திகைத்தான். சினிமா உலகம் அதிசயமானது. அது ஒரு தனி உலகம், காலத்தையும் பணத்தையும் பற்றிய கவலை அங்கு சஞ்சரிப்ப வர்களுக்குக் கிடையாது. சும்மா வெட்டிப் பொழுது போக்குவதுதான் அங்கே காணப்படும் பெரும்பாலாரின்