பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

互象数 மன்னிக்கத் தெரியாதவர் அவனும் துணிந்து நடிக்க இசைந்தான். கதையில் தனக்கு ஏற்ற முறையில் ஒரு பாத்திரத்தை சிருஷ்டித்துக் கொண்டான். சினிமா உலக நியதிப்படி விடிவெள்ளி புரடக்ஷன்'ஸின் படம் அவசரமில்லாமலே வளர்ந்து, ஒரு மாதிரி படமும் வந்தது. வெற்றியும் பெற்றது. மாதவனேப் பாராட்டுவதற் கும் ஆட்கள் இருந்தார்கள். மாதவன் வசந்தாவைச் சந்தித்து வந்தான், என்ருலும், வர வர அவள் விலகிச் செல்வது போன்ற உணர்வு அவனுக்கு ஏற்பட்டிருந்தது. அதற்காக அவன் கவலை கொள்ளவு மில்லை. அவளுக்குப் புதிய நண்பன் எவளுவது கிடைத்திருக்க லாம் என்று எண்ணிஞன். அவனுக்கும் புதிதாக ஒரு சிநேகிதி கிடைத்துவிட்டாள். அந்தக் கம்பெனியின் இரண்டாவது படத்தில் நடித்துக் கொண்டிருந்த குமாரி சம்பா மாதவனின் தோற்றத்தாலும், பேச்சினலும், குணத்திலுைம் வசீகரிக்கப்பட்டாள். அவ னும் அவளும் படத்தில் ஜோடியாக நடித்தனர். எங்கும் எப்பொழுதும் ஜோடியாகக் காட்சி அளிக்கலாயினர். குமாரி சம்பா வேறு கம்பெனிப் படங்களிலும் நடித்துக் கொண்டிருந்தாள். கதாநாயகி பார்ட் அவளுக்கு அளிக்கப் படுவதில்லை. பிரபல நட்சத்திரங்களுக்கே அத்தகைய வேட மெல்லாம் ரிசர்வ் செய்யப்பட்டிருந்தன. ஆயினும், கதா நாயகிக்கு அடுத்தபடியான பாகங்கள் அவளுக்குக் கிடைத் தன. பணமும் தாராளமாக அவளிடம் சேர்ந்தது. மாதவனிடமும் ஆ யி ர க் க ண க் கி ல் பணம் புரளத் தொடங்கியது. அவன் உடைகளில் மாறுதல் ஏற்பட்டது முதலில். கழுத்தில் தங்கச் சங்கிலியும், விரலில் மோதிரம் ஒன்றும் கொலுவிருந்தன. அவனிடமிருந்து இனிய வாசனை அலேகள் பரவின. சம்பாவோ வாசனைக் குளத்திலே மூழ்கி எழுந்தவள்போல நெஞ்சில் கனல் மணக்கும் சுகந்த பதார்த்தமாகவே திரிந்தாள்.