பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஹீரோ 翼器夏 அவன் பெயரும் புகழும் எங்கும் பரவின. சில 'மஞ்சள் பத்திரிகைகள்' அவனைப்பற்றி வசைபாடின. அதற்காக அவன் வருந்தவில்லை. லட்சியப் பாதையில் நான் வெற்றி கரமாக முன்னேறுகிறேன் என்று தான் இதற்கு அர்த்தம்' என்று சொல்விச் சிரித்தான் மாதவன். தினது வாழ்வின் வளர்ச்சிபற்றி திருப்திகொள்ளும் மாதவனின் உள்ளத்தில், அடிக்கடி ஒரு குறை வேதனையாக உறுத்திக்கொண்டே இருந்தது. அவன் நினைவில் ஒரு முகம் தோன்றும். கேலியாகச் சிரிக்கும். அந்தச் சிரிப்பொலி நீங்காது எதிரொலித்துக் கொண்டிருப்பது போன்ற பிரமை எழும் அவனுக்கு. என்ருே ஒருநாள் எவளோ ஒருத்தி அவனைப் பார்த்துச் சிரித்தாளே அதை அவன் மறக்கவில்லை. அவன் நினைவு அவள் முகத்தை அழியாமல் பாதுகாத்து வந்தது. அவன் கண்கள் விழிப்புடனிருந்து அவளுக்காக எ ங் கு ம் எப் பொழுதும் வலைவீசின. அவளே எப்படியும் சந்திக்க முடியும் என்ற நம்பிக்கை அவனுள் அழுத்தமாகப் பதிந்து கிடந்தது. கம்பீரமாகக் குதிரைமீது செல்லும்போதும், ஒய்யார மாக சாரட்டில் போகும்போதும் அவன் விழிகள் எங்கெங்கோ நீந்திய முகக் காடுகளிலும், அழகு முகங்களின் அற்புதத் தொகுதிகளிலும் சுழன்று சஞ்சரித்தன. எவ்வளவோ முகங்கள் அவனைப் பார்த்தன. ஆயினும், அந்த ஒரு முகத்தை, சிரிக்கும் சுடர்க் கண்களை-அவன் காண முடிய வில்லை. அதஞல் அவன் நம்பிக்கை வறட்சி எய்திவிடவு மில்லை. - ஒரு சமயம் அந்தச் சிங்காரியை அவன் பார்த்ததாக நினைத் தான். ஒரு சினிமாவில் விசேஷக் காட்சி முடிந்து கும்பல் நெருக்கி இடித்து நகர்ந்துகொண்டிருந்தது. கூட்டத்தில் ஒரு இடத்தில், அடர்த்தியான இலைகளுக்கு மத்தியில் மலர்ந்து காணப்படும் தாமரைபோல, அம் முகம் பளிச்சிட்டது. அவன் அப்பெருங் கூட்டத்தினுள் புகுந்து அவள் அருகில் செல்வது சாத்தியம் அல்ல. அவன் அவளே நெருங்குவதற்குள்