பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

芷荔盛 மன்னிக்கத் தெரியாதவர் அவள் காரில் ஏறி மறைந்துவிடலாம். மேலும், அவன் சிறிது தூரம்கூட செல்ல முடியாதபடி கும்பல் அவனை மொய்த்து நெருக்கிவிடுமே!

ேருெரு சந்தர்ப்பத்தில் அவன் கு கிரைமீது அமர்ந்து ரஸ்தாவில் ஒரு லெவல் கிராளிங் அருகே ரயில் வண்டி போய், கதவு திறக்கப்படுவதற்காகக் காத்து நின்றன். அப்பொழுது வேகமாகச் சென்ற வண்டித் தொடரின் ஒரு ஜன்னல் ஓரத்தில் அந்த முகம் காட்சி தந்தது.

ஆகவே அவள் பட்டனத்தில்தான் இருக்கிருள் என்ற உறுதி அவனுக்கிருந்தது. அவளே நேருக்கு நேர் சந்திக்கும் வர்ய்ப்பு அவசியம் வரும்; வந்தே திரும் என்று அவன் நெஞ்சில் எதுவோ ஒன்று சதா அறிவுறுத்தி வந்தது. கனவிலேகூட அவள் அவனைப் பார்த்துப் பரிகசிப்பது போன்ற காட்சிகளே மிகுதியாக வந்து போயின. - - "தான் என்னதான் வெற்றி பெற்ருலும் எவ்வளவு ஆடம்பரமாகவும் பெருமையோடும் வாழ்ந்தாலும், இனம் தெரியாத அந்த அலங்காரியைச் சந்தித்து அவளுக்குச் சரியான பாடம் கற்பிக்காவிட்டால், தன் உள்ளத்தில் அமைதி ஏற்படவே ஏற்படாது என்றே தோன்றியது அவனுக்கு. தனக்கு இதுவரை உதவிபுரிந்து ஊக்குவித்த காலம் என்ருவது ஒருநாள் அவளேயும் தன்முன் கொண்டு வந்து நிறுத்தாமல் போகாது என்று அவன் திடமாக நம்பிஞன். அவனுடைய நம்பிக்கை பொய்த்து விடவில்லை. ஒருநாள் காலையில் மாதவன் சாரட்டில் கிளம்பி, 'மன அமைதி நாடி"ச் செல்வதாகச் சொல்வி வெகுதூரம் சென்ருன். பல மைல்களுக்கு அப்பாலுள்ள அழகிய சிற்றுார் ஒன்றை அடைந்து, அவ்வூர் ஒரமாக அமைதியோடு திகழும் கடற்கரைப் பக்கம் சேர்ந்தான். அங்கு சிறிதுநேரம் போக்கி விட்டுத் திரும்பும்போது மணி பதினென்றிருக்கலாம். நல்ல வெயில். பட்டணத்துக்கு இரண்டு மைல் தள்ளி, ஜன நடமாட்டம் இல்லாத ரஸ்தாவில், ஒரு கார் அசைவற்று