பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శిక్షీ மன்னிக்கத் தெரியாதவர் அவன் இதயத்தை சதா குத்திக் குடைந்துகொண்டிருந்தஅதே சிரிப்பு: இப்போதுகூட அவன் உள்ளத்திலே ஏதோ ஒரு நரம்பு எப்படியோ இசைகேடாக முறுக்கேறிக் கொண்டது போல் வேதனை பிறந்தது. - அவன் அவளை ஏற இறங்கப் பார்த்தான். அவளை முதன் முதலில் பார்த்துப் பல வருஷங்கள் கழிந்திருந்தபோதிலும், அவள் முன் போலவே இளமையோடு. அழகோடு, குளுமை யான சிங்காரத் தோற்றத்தோடுதான் காட்சி தந்தாள். இவள் நினைவுத் திறனும் பசுமையாகவா இருக்கும்? என்று வியப்படைந்தான் அவன். அவளுடைய சிரிப்பு ஒருவாறு அடங்கியதும் அவள் சொன்னுள்: உங்களை இந்த நாட்டின் பச்சைக் குழந்தைகூட இனம் கண்டுகொள்ளுமே! அவ்வளவு புகழ் இருக்கிறது உங்களுக்கு, நீங்கள்தான் பெரிய ஸ்டார் ஆச்சுதே...? அவன் மனப் பாரம் நழுவி விழுந்தது. அப்பாடா!இவளுக்குப் பழைய நினைவு இல்லை. இருக்கமுடியாது. நடுத் தெருவில் திரிந்துகொண்டிருந்த எவனே ஒருவனைப்பற்றி இவள் ஏன் எண்ணிக்கொண்டிருக்க வேண்டும்! அப்படி நான் நினைத்ததே பேதமையில்லையா?...அவன் மனம் சிரித்தது இப்படி. - * உங்கள் காருக்கு என்ன? பெட்ரோல் இல்லையா?" என்று கேட்டான் அவன். - "பெட்ரோல் எல்லாம் இருக்குது. என்னவோ பிரேக் ஆயிட்டுது. யாராவது ஒரு ஆளே அனுப்பித்தான் சரிப் படுத்தச் சொல்லணும். அதுவரை கார் இங்கேயே கிடக்க வேண்டியதுதான்." 'நீங்கள் ரொம்ப நேரமாக இப்படி நிற்கிறீர்களா?" முக்கால் மணிக்கும் அதிகமிருக்கும்' *அடடா!' என்ருன் அவன். ஏதாவது கார் வரும் என்று நானும் பாத்தபடி நிற்கிறேன். இதுவரை எதுவுமே தலைகாட்டலே, என்