பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

豆3& மன்னிக்கத் தெரியாதவர் அவள் ஒரு அறையைத் திறந்தாள். சிறிய அறைதான் அது. எனினும் மிக மனேகரமாக இருந்தது. கம்மென்று' ஒரு வாசனை அங்கு நிறைந்து நின்றது. பெரிய கட்டில் ஒன்று நேர்த்தியான வேலைப்பாடுகள் உடையது-அந்த அறையின் பெரும்பகுதியை அடைத்துக் கிடந்தது. அதன் மீது வசீகரமான மெத்தையும் தலையணைகளும் கிடந்தன. கட்டிலுக்கு உயரே அழகிய பூந்திரைகள் மடக்கிச் சுருட்டிக் கட்டப்பட்டிருந்தன. பார்வையிலேயே அது என்ன அறை என்பது அவனுக்கு விளங்கிவிட்டது. எனினும், அவள் புன்சிரிப்போடு 'இதுதான் பெட்ரூம் என்று சொல்லி வைத்தாள். அப் பொழுது அவள் பார்த்த பார்வை அவனை என்னென்னவோ பண்ணியது. "நான் சாயங்காலம்தான் வருவேன் என்று சொல்லி பிருந்ததால், சமையல் எதுவும் ஆகவில்லை. இப்ப சொல்லி யிருக்கிறேன். சீக்கிரமே தயாராகிவிடும்" என்ருள் அவள். மெதுவாகத்தான் ஆகட்டுமே! சாப்பாட்டுக்கு என்ன அவசரம்?' என்ருன் மாதவன். அவன் கண்கள் அவள் விழி களேத் தொட்டன. அவள் அவன் நடித்த படங்களைப்பற்றி, தான் ரசித்த காட்சிகளைப்பற்றி எல்லாம் இனிமையாகப் பேசிளுள். அவன் குதிரை சவாரி செய்து ஜம்மென்று உலா போகும் நேர்த்தி பற்றியும் உவகையோடு குறிப்பிட்டாள். பேச்சு சுவாரஸ்யத்தில் அவர்கள் எப்பொழுது எப்படி மனேகரமான சிருங்கார அறையின் ஒய்யாரக் கட்டில்மீது அமர்ந்தார்கள். இருவருக்குமிடையே இருந்த தூரம் எவ்வாறு தேய்ந்து குறுகி இல்லாது ஒழிந்தது என்பது எதுவும் அவர் களுக்கே தெரியாது. நெருக்கமும் உணர்வும் தங்கள் வேலை யைத் தீவிரமாகச் செய்தன. அப்புறம் இருவரும் ஒன்ருவ தற்கு அவர்கள் தனித்தனியே விசேஷ முயற்சிகள் எடுக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லைதான். - - . .