பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

145 மன்னிக்கத் தெரியாதவா வெளியே வண்டி வந்து நின்ற ஒசை கடகடத்தது. அவன் அவளே விலக்கிவிட்டுப் புறப்பட்டான். நீங்கள் அடிக்கடி வரணும். இன்ைெரு நாள் கண்டிப்பாய் வரணும்: என்று கூறி வழி அனுப்பினுள் அவள். - வண்டியில் அமர்ந்து, தனித்திருந்து, நிகழ்ந்தது பற்றி எண்ணிப்பார்த்த மாதவனுக்கு, அது ஒரு வெற்றி என்றே படவில் லே. அவள் எதிரிபோல் நடந்து கொள்ளவில்லே! தன்னுேடு ஒத்துழைக்கத் துடித்த துணைபோலவே திகழ்ந்தாள் என்ற உணர்வு அவனுக்கு இருந்தது. மேலும் அவள் தனது விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்ள சாகசம் செய்து, .. சாமர்த்தியமாக அவனைச் சிக்க வைத்துவிட்டாள் என்ற உண்மையும் அவனுக்குப் புலப்பட்டது. அந்நோக்கிலே இது அவளுடைய வெற்றி என்றே தோன்றியது அவனுக்கு. இப்படி எண்ணிக் குழம்பிய மாதவன் பெருமூச்செறிந் தான். முடிவில் அவனுடைய மனக்குறளி திருப்திகரமான, ஒரு விடை கண்டுபிடித்தது. வெற்றி என்று கொண்டால் இரண்டு பேருக்கும் வெற்றிதான்; தோல்வி என்ருல். இரு வருக்கும் தோல்விதான். வெற்றியும் தோல்வியும் கலந்த இனிய அனுபவம் இது என்று நினைத்தது. அது. பீட்டங்கள்மீது இந்நாட்டினருக்கு இருப்பது போன்ற மோகம் வேறு எந்நாட்டினருக்கும் இராது என்றே தோன்று கிறது. சாதாரண ஜனங்கள் தங்களினின்றும் மாறுபட்டவர் களுக்குப்பட்டங்கள் வழங்குகிருர்கள். தம்மினும் உயர்ந்தவர் களைக் கெளரவிக்கப் பட்டங்கள் அளிக்கிருர்கள். உயர்ந்து விட்டவர்கள் தங்களேத் தாங்களே விளம்பரப்படுத்திக் கொள்ளவும், தங்களுக்கு வேண்டியவர்களை உயர்வுபடுத்த வும் பட்டங்கள் கொடுக்கிருர்கள். தங்களுக்குத் தாங்களே பெருமை தேடிக்கொள்ளப் பாடுபடுகிறவர்கள் தங்கள் புகழ் பாடிகள் சிலரைக்கொண்டு பட்டம் சூட்டும் விழாவுக்கு ஏற்பாடு செய்து கொள்கிருர்கள். இத்தகைய யுகதர்மங்கள் எவ்வளவோ! . - ->