பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

球盛翁 மன்னிக்கத் தெரியாதவர் கனவிலாவது எண்ண முடியுமா? ஆளுல், அத்தான், சந்தேகம் பிடித்த என் கணவர் மனசில் அது பிசாசு ரூபம் பெற்றுவிட்டது. ஒரு பெளர்ணமியன்று நான் சொன்னதை மறந்துவிடம்மா என்று நீங்கள் கூறினர்களே, அதற்கு அவர் என்னென்னவோ அர்த்தங்கள் கற்பித்துக்கொண்டார். ஊர் வந்து சேர்ந்ததும், அவர் செய்த குறுக்கு விசாரணை களும் கொடுத்த தண்டனைகளும், ஏசிய ஏச்சுக்களும், பேசிய பேச்சுக்களும்-அம்மம்மா நினைக்க நினைக்கப் பயமாக இருக் கிறது. உள்ளமும் உடலும் கூசுகின்றன. "அதன் பிறகு என் வாழ்க்கை ஒரே நரகம் தான். உங்களைப் பற்றி யாராவது அவதூறு பேசினல் அவருக்குச் சந்தோஷம் பிறக்கும். ஒடி வந்து அதை என்னிடம் அப்படியே ஒப்பிப்பார். சாக்கடைத் தாள்கள் உங்கள்மீது ஆசிங்கத்தை வாரி எரிகிறபோதெல்லாம், அவர் ஆர்வமாக அவற்றைக் கொண்டு வந்து என்னிடம் கொடுப்பார். அத்தான், அத்தான்னு நினைச்சுக்கிட்டு இருக்கியே! பாரு உங்க அத்தான் லெச்சனத்தை என்று பழிப்பார். அவர் செயல்களைக் கவனிக்கையில், அவருக்கு என்மீது சந்தேகம் மட்டுமல்ல, உங்கள்மீது பொருமையும் ஏற்பட்டிருக்கும் என்று எனக்குப் படுகிறது. வர வர என் நிலைமை மகா மோசமாகிவிட்டது. எனக்கு ஏன் இன்னும் சாவு வரவில்லை என்று நான் மனசாற அழுது புலம்பாத நாள் கிடையாது. என் குழந்தைகளை நினைக்கும்போதுதான் என் மனத் துயரம் அதிகமாகிறது... "அத்தான், உங்கப்பற்றி யார் யாரோ எவ்வளவோ சொல்கிரு.ர்கள். நீங்கள் ஏன் இப்படி மாறினிர்கள்?" காந்திமதி இன்னும் எழுத நினைத்திருந்தாளோ அல்லது எழுத்து வேலைக்குத் தடை ஏற்பட்டுவிட்டதோபுரியவில்லை. கடிதம் அப்படியே முடிந்துபோயிற்று. பிறகு அவசரம் அவசரமாக காந்திமதி என்று கிறுக்கி, கவரில் அடைத்துத் தபாலில் சேர்த்திருப்பாள் என்று அவனுக்குத் தோன்றியது.