பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஹீரோ 翠莎瑟 அவள் மகிழ்வும் நன்றியும் பெருக அவனைப் பார்த்தாள். சிரித்தாள். எனக்கு நடிக்கத் தெரியாதுன்னு நினைக்காதீங்க, ஸார். நான் எத்தனையோ வேஷங்களில் நடித்திருக்கிறேனே." 'அதெல்லாம் சரி பேபி. ஆனல் வந்து..." வந்து-போயி என்கிறதெல்லாம் என்கிட்டே வேண் டாம். ஸார். உங்க படத்திலே ஒரு சிறு பாகமாக இருந்தா லும் போதும். . . . "நான் சொல்றதைக் கேளு முதல்லே, உங்க அப்பா அம்மாவுக்குத் தெரிஞ்சதும் அவங்க கோபிப்பாங்க. சண்டை பிடிப்பாங்க. சின்னப் பெண்ணை இவன்..." பேபி அவசரமாகக் குறுக்கிட்டாள். நான் ஒண்னும் சின்னப் பெண் இல்லே. எனக்குப் பதினெட்டு வயசுக்கு மேலே ஆயிட்டுது. என் இஷ்டம்போல் நடந்துகொள்ள எனக்கு உரிமை உண்டு.” இருக்கட்டும், அதற்காக, உன் போன்ற நல்ல பெண் வீணுக நாசமாக வேண்டுமா? பேபி, நான் சொல்வதைக் கேள். சினிமா உலகம் உனக்குச் சரிப்படாது. நீயோ அருமையான ரோஜாப்பூ மாதிரி இருக்கிறே. இங்கே உள்ள காற்று பட்டாலே வாடி வதங்கிவிடுவே கசங்கி உருக் குலைந்து போவாய்...' அவன் பேச்சை, கசப்பு மருந்தைக் குடிக்கும் குழந்தை மாதிரி முகத்தைக் கோணலாக வைத்துக்கொண்டு கேட்டு நின்ருள் பேபி. அவளுக்கு அந்த உபதேசம் பிடிக்கவில்லை என்பதை அவள் முகமே விளம்பரப்படுத்தியது. அவள் அவன் அருகில் வந்து நின்ருள். "நான் உங்களைப்பற்றி நி னை த் த து தவறுதான் போலிருக்கு!’ என்ருள், பெருமூச்செறிந்தபடி தரையைப் பார்த்துப் பொழுது போக்கினுள் பேபி. அவள் போக்கு அவனுக்கு வேடிக்கையாகப்பட்டது. நீ என்ன நினைத்தே பேபி?’ என்று கேட்டான் அவன்.