பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

置莎登 மன்னிக்கத் தெரியாதவர் "ஐயோ என் ஞானியே! என்று குழைந்து அவன் கழுத் தைக் கட்டிக்கொண்டு முகத்தோடு முகம் சேர்த்தாள் đFtħi jfr. 'கலாசாரக் கழகத் தலைவர்'பரப்பிரம்மம் பி.ஏ. ஏற்பாடு செய்த விழாக்கள், மகாநாடுகளில் எல்லாம் மாதவன் காட்சி தந்தான். சில இடங்களில் பேசவேண்டிய அவசியமும் ஏற்பட்டது. இதல்ை மாதவனுக்குப் பக்தர்கள் கூட்டம் பெருகியது. பரப்பிரம்மம் கட்சியின் செல்வாக்கும் வளர்ந்தது. நாட்டிலே தேர்தல் ஜூரம் பரவத் தொடங்கியது. பல கட்சிகளுக்கிடையிலும் போட்டி. அரசியல் வாதிகளுக் கிடையே மிகுந்த பரபரப்பு ஏற்பட்டிருந்தது. தேர்தலில் பங்கு பற்றுவதா வேண்டாமா என்று முடிவுசெய்ய இயலா மல் தவித்துக்கொண்டிருந்தார் பரப்பிரம்மம், நாடே தங்களின் ஏகபோக உரிமை என்பதுபோல் வாழ்ந்து கொழுத்துக்கொண்டிருந்த வெகுஜனக் கட்சி’ வரவர மதிப்பிழந்து, மக்களின் நம்பிக்கையையும் இழந்து வந்தது. வரும் தேர்தலில் அந்தக் கட்சிக்கு வெற்றி கிட்டுவது சந்தேகம் என்ற நிலை ஏற்பட்டிருந்தது. அதன் தலைவர் செல்வரங்கம், இ ழ ந் த செல்வாக்கையும் ஆதரவையும் எப்படியும் அடைந்தே தீருவது என்று அரும்பாடுபட்டார். நேர்வழிகளையும், மறைமுக யுக்திகளையும், சாணக்கிய முறை களையும் தீவிரமாகக் கையாள முன்வந்தார். நாட்டினரிடையே மாதவனுக்கு இருந்த செல்வாக்கைத் தனது கட்சிக்கும், தனக்கும் பயன்படுத்திக்கொள்ள ஆசைப் பட்டார் அவர். இதை அறிந்த பரப்பிரம்மம் கலாசாரக் கழகத்தையும் தேர்தலில் குதிக்கச் செய்தார்!" மாதவனை யும் தேர்தலுக்கு நிற்கும்படி துண்டினர். இதில் குறிப் பிடத் தகுந்த விசேஷம், மாதவன் வெகுஜனக் கட்சித் தலைவர் செல்வரங்கத்தையே எதிர்த்துப் போட்டியிட முன் வத்தான். -