பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஹீரோ 襄5器 செல்வரங்கம் எரிமலையாஞர். "இந்தக் கூத்தாடிப் 'ஆக்கு இவ்வளவு திமிர் வந்துவிட்டதா? பார்கிறேன் இவனே! என உறுமிஞர். இறுதி முயற்சி ஒன்று செய்யலாமே என்று அவர் உள்ளம் ஆன்ச காட்டியது. ஆகவே அவர் மாதவனேச் சந்தித்துப் பேச வந்தார். - மாதவன் அவரை அன்புடன் உபசரித்தான். மதிப் பளித்துக் கெளரவித்தான். அவனது எண்ணத்தை மாற்றிக் கொண்டு, தேர்தலிலிருந்து அவன் வாபஸ் பெற வேண்டும், போட்டியிட்டாலும் அவன் வெற்றிபெறப் போவதில்லை என்று செல்வரங்கம் சொன்னர். காரணங்கள் காட்டி விளக்கமாகப் பேசிஞர். அவர் பேச்சு முழுவதையும் பொறுமையுடன் கேட் #குத்த மாதவன், வருத்தம். தங்கள் அரிய யோசனைகளே அதி ஏற்றுக்கொள்வதற்கில்லை என்று உறுதியாகத் தெரி வித்தான் செல்வரங்கத்தின் முகம் கறுத்தது. அனல் மூச்சு அவர் உள்ளத்தின் ஆழத்திலிருந்து பொங்கி எழுந்தது. "நீ ஜெயிக்கமாட்டாய், இந்தத் தேர்தலில் உனக்குத் தோல்வி நிச்சயம் என்று பெரிய தீர்க்கதரிசிபோல் கூறிஞர் அவர். . மாதவன் அலட்சியமாகச் சிரித்தான். அது வெகு ஜனங் கள் அளிக்க வேண்டிய முடிவு. வெகுஜனக் கட்சித் தலைவர் தரவேண்டிய தீர்ப்பு அல்ல" என்ருன். தலைவரின் கண்கள் சிவப்பேறிக் காட்டின. இதுமாதிரிப் பேச்செல்லாம் நாடகத்திலும் சினிமாவிலும் எடுபடும். ஆளுல் அரசியலில் செல்லாது தம்பி. உனக்கு கிளாமரும்: ஜனங்களின் கைத்தட்டலும், விசிலடிப்பும் ஏராளமாகக் கிடைக்கலாம். ஆனல் அரசியலில் தேர்தலில் வெற்றிபெற விசேஷ அந்தஸ்தும், தகுதி திறமைகளும் வேண்டும் என்ருர். மீண்டும் மாதவன் சிரிக்கவே செய்தான்: “உங்களுக்காக நான் பிரசாரம் செய்தால் நீங்கள் வெற்றி பெற முடியும் என்று நம்புகிற நீங்களே இப்படிச்சொல்கிறீர்களே! என்க்காக