பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

篮器霹 மன்னிக்கத் தெரியாதவர் நானே பிரசாரம் செய்து, நானே போட்டியிட்டால் ஏன் வெற்றிபெற முடியாது அண்ணுச்சி?’ என்று எகத்தாளமாகக் கேட்டான். - ஒகோ! என்று தலையை ஆட்டிக்கொண்டாம் தலைவர். சரி, நான் ஒன்று கேட்கிறேன். நீயும் உன்னேச் சேர்ந்தவர் கள் சிலரும் வெற்றி பெற்றுவிட்டால்கூட, மந்திரியாக வத்துவிட முடியுமா?’ என்ருர், வரலாம், வந்தால்தான் என்ன குடிமுழுகி விடுமாம்? என்ற மாதவன் அட்டகாசமாகச் சிரித்தான். "இந்த நாட்டு அரசியலுக்கு, ஐயோ!' என்று முனங்கி விட்டு, வேருென்றும் பேசாமல், மாதவனேத் திரும்பிப் பாராமல் வெளியேறிஞர் தலைவர் செல்வரங்கம். - அதிலிருந்து மாதவனின் வைராக்கியமும் பிரசார வேக மும் அதிகரித்தன. எல்லாக் கட்சிகளும் மும்முரமாக உழைத்தன. தேர்தலும் வந்து போயிற்று. x ‘வெகுஜனக் கட்சி"த் தலைவரின் தீர்க்கதரிசனம்’ பலிக்கவில்லே! மாதவன் பிரமாதமான வெற்றி பெற்ருன். 'கலாசாரக் கழகம் பெரும் வெற்றி பெருவிட்டாலும்: மாதவனின் வெற்றி தனது கட்சியின் மகத்தான வெற்றி என்றே கருதினர் பரப்பிரம்மம் பி. ஏ. செல்வரங்கமும் அவர் கையாட்களும் குமைந்தார்கள், புகைந்தார்கள், கொதிப்புற்றுப் பொழுதுபோக்கிஞர்கள். மாதவனின் வெற்றியை மிகப் பிரமாதமான முறை யிலே கொண்டாட ஏற்பாடுகள் நடைபெற்றன. ஏகப்பட்ட பேர் மிகுந்த உற்சாகத்தோடும் ஊக்கத்தோடும் உழைத் தார்கள், . அன்றுதான் விழா நாள். மாலை நேரம். . - குறிப்பிட்ட வேளைக்குப் பல மணிக்கு முன்பிருந்தே கும்பல் திரளத் தொடங்கியது. எங்கும் பரபரப்பு. நேரம்